54.5 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை ரெடி! படிப்பு முடிந்த உடன் ஜாலி தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா போன்ற பிரம்மாண்ட தேசத்தில் நிறைய கண்டு பிடிப்புகள், புதிய வியாபாரங்கள், தொழில் துறை வளர்ச்சிகள் இருக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம், வேலைக்கு போகும் பணியாளர்களாகவே இருக்கிறோம். தற்போது மெல்ல தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

இருப்பினும் ஒரு நல்ல வேலையில், ஒரு கம்பெனியின் சூழலில் சில வருடங்கள் வேலை பார்த்துவிட்டு, அதன் பிறகு தொழில் தொடங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கத் தான் செய்கிறது என்பது பாராட்டுக்குரியது. சரி 54 லட்சம் சம்பளத்துக்குப் போவோம்.

வேலை
 

வேலை

நல்ல வேலை என்றாலே, அதற்கு முன்பு நல்ல பிராண்டெட் கல்லூரிகளில் படிப்பு இருக்க வேண்டும் என்பது கிட்டத்தட்ட கட்டாயம் போலத் தெரிகிறது. அப்படி இந்தியாவின் முன்னணி ஐஐஎம் கல்லூரிகளில் ஒன்றாக ஐஐஎம் கொல்கத்தாவில் இருக்கும் மாணவர்களுக்குத் தான் தலைப்பில் சொன்ன படி வேலை கிடைக்க இருக்கிறதாம்.

மொத்த சராசரி

மொத்த சராசரி

2020-ம் ஆண்டு தங்கள் எம் பி ஏ பட்ட மேற்படிப்பை முடிக்க இருக்கும் ஐஐஎம் கொல்கத்தா கல்லூரி மாணவர்களுக்கு நேர்காணல்கள் நடத்தினார்களாம். இதில் 136 நிறுவனங்கள் பங்கு பெற்றார்களாம். இந்த நேர்காணலில், 439 மாணவர்களுக்கு 492 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறதாம்.

அதிகம்

அதிகம்

வழக்கம் போல ஆலோசனைத் துறை (Consulting) சார்ந்த வேலைகள் தான் அதிகம் வழங்கப்பட்டு இருக்கிறதாம். மொத்த வேலை வாய்ப்புகளில் 31 % வேலை வாய்ப்புகள் இவர்களிடம் இருந்து தான் வந்திருக்கிறதாம்.

The Boston Consulting Group, McKinsey & Co.,

Bain & Co.,

Kearney,

Price waterhouse Coopers,

Accenture... போன்ற முன்னணி கன்சல்டிங் நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

பிரைவேட் ஈக்விட்டி
 

பிரைவேட் ஈக்விட்டி

கன்சல்டிங்கைத் தொடர்ந்து, ஐஐஎம் கொல்கத்தாவின் மொத்த வேலை வாய்ப்புகளில் 17 சதவிகித வேலை வாய்ப்புகளை பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வெஞ்சர் கேப்பிட்டல் துறை கொடுத்து இருக்கிறதாம்.

Bank of America Merrill Lynch Barclays,

Goldman Sachs,

JP Morgan Chas... போன்ற நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து இருக்கிறார்களாம். ஆக கன்சல்டிங் 31 + பிரைவேட் ஈக்விட்டி 17 = 48 சதவிகித வேலை வாய்ப்புகளை இந்த இரண்டு துறைகள் மட்டுமே கொடுத்து இருக்கிறார்களாம்.

மற்ற வேலைவாய்ப்புகள்

மற்ற வேலைவாய்ப்புகள்

மீதமுள்ள 52 சதவிகித வேலை வாய்ப்புகளில் விற்பனை (Sales), சந்தைப்படுத்துதல் (Marketing), பொது நிர்வாகம் (General Management) போன்ற துறைகளில் இருந்து 30 சதவிகித வேலை வாய்ப்புகள் கொடுத்து இருக்கிறார்களாம். இந்த பிரிவில் இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களான

Aditya Birla Group,

Mahindra & Mahindra,

Reliance,

Vedanta,

Hindustan Unilever,

Colgate-Palmolive,

ITC... என பல நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

இ-காமர்ஸ்

இ-காமர்ஸ்

இது போக Product Management, IT, Analytics and Operations துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறதாம். இந்த பிரிவில் தான் இன்றைய இளசுகளின் ஹாட் கம்பெனிகளான

Microsoft,

Google,

Amazon,

Flipkart,

American Express,

HCL,

Mastercard என பல நிறுவனங்களும் மீதமுள்ள 22 சதவிகித வேலைவாய்ப்புகளைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

54 லட்சமா

54 லட்சமா

ஐஐஎம் கொல்கத்தா கல்லூரியின் டாப் 10 சதவிகித மாணவர்களின் சராசரி ஆண்டு சம்பளமே 54.5 லட்சமாம். டாப் 25 சதவிகித மாணவர்களின் சராசரி ஆண்டு சம்பளம் 41.8 லட்சம் ரூபாயாம். ஒட்டு மொத்தமாக ஐஐஎம் கொல்கத்தா கல்லூரி மாணவர்களின் சராசரி ஆண்டு சம்பளமே 28 லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து இருக்கிறார்களாம்.

5 லட்சம் 5 வருடம்

5 லட்சம் 5 வருடம்

ஹிம்... நம் இந்தியாவில் சராசரி மாணவர்கள் எல்லாம், படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்து 15 - 20 வருட அனுபவம் இருந்தால் கூட, நாம் எல்லாம் இந்த சம்பளத்தைப் பார்ப்போமா என்று தெரியவில்லை. ஆண்டு வருமானம் 5 லட்சம் தொடுவதற்கே 5 வருடத்துக்கு மேல் பணி அனுபவம் தேவையாக இருக்கிறது எனும் போது 54 லட்சத்தைத் தொட வேண்டும் என்றால் என்ன செய்வது..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIM kolkata top 10 percent student average salary 54.5 lakhs

Indian Institute of Management kolkata college top 10 percent students average salary is Rs 54.5 lakhs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more