சென்னை: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி (IIP) ஜூன் மாதம் 4.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சேவை துறையை காட்டிலும் உற்பத்தி துறையை அதிகம் நம்பியிருக்கும் வேளையில் இந்த உற்பத்தி துறை தரவுகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதம் IIP குறியீடு 4.2 சதவீதமாக உயர்ந்துள்ள வேளையில், 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் IIP வளர்ச்சி 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டு 4.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. IIP தரவுகளில் மூன்று முக்கிய துறைகள் உள்ளன, இது தான் நாட்டின் உற்பத்தி துறை வளர்ச்சியை படம்போட்டு காட்டும் முக்கிய கருவியாக உள்ளது.

சுரங்கத் துறை ஜூன் 2024-ல் வருடாந்திர அடிப்படையில் 10.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி மற்றும் மின்சாரத் துறை முறையே 2.6 சதவீதம் மற்றும் 8.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன. சுரங்கத் துறை தான் ஜூன் 2024-ல் IIP வளர்ச்சியை பெரிய அளவில் ஊக்குவித்ததுள்ளது.
சுரங்கத் துறை மட்டும் IIP குறியீட்டில் சுமார் 14.37 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது, அதேசமயம் உற்பத்தித் துறை 77.63 சதவீத பங்கீட்டையும், மின்சாரத் துறை 7.99 சதவீத பங்கீட்டையும் கொண்டுள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் துறை ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையிலான காலத்தில் 1.3 சதவீதம் வீழ்ச்சியடைந்து 3.8 சதவீதமாக உள்ளது, இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் 5.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
IIP குறியீடு வளர்ச்சியைக் காட்டியுள்ள போதிலும், இக்குறியீட்டில் முக்கிய பங்கீட்டை வகிக்கும் உற்பத்தித் துறை வளர்ச்சியில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகம் (MoSPI) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையிலான மாதங்களில் உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் புகையிலை பொருட்கள் உற்பத்தியில் 5.5 சதவீதம் மற்றும் 4.9 சதவீதம் என்ற வருடாந்திர வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஜூன் 2024-ல் IIP குறியீடின் வளர்ச்சியில் அதிகம் பங்களிப்பு செய்த மூன்று முக்கிய துறைகள், அடிப்படை உலோகங்கள் உற்பத்தி 4.9 சதவீதம் வளர்ச்சி, மின் சாதனங்கள் உற்பத்தி 28.4 சதவீதம் மற்றும் மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் உற்பத்தி 4.1 சதவீதம் உயர்வு கண்டு வளர்ச்சி பாதைக்கு திருப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications