ஐஐடி பாம்பே-வில் நடந்து வரும் கேம்பஸ் இண்டர்வியூவில் 1500 பேருக்கு மேல் 9வது நாள் வரை ஆஃபர் லெட்டர்களை பெற்றுள்ளனர்.
இந்த வேலை வாய்ப்புகளை வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாது, உள்நாட்டு நிறுவனங்கள் பலவும் கலந்து கொண்டுள்ளது. இதில் ரிலையன்ஸ், அதானி, டாடா குழுமம் என பல நிறுவனங்களும் பங்கேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐஐடி சென்னை, ஐஐடி காரக்பூர், ஐஐடி டெல்லி உள்ளிட்ட சில பிரிவுகளில் பணியமர்த்தல் இருந்த நிலையில், அதில் 4 கோடி ரூபாய்க்கும் மேலாக சம்பளம் வாங்கியவர்களின் பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன நிறுவனங்கள்?
இந்த கேம்பஸ் இண்டர்வியூவுக்கு 44 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாகவும், இதில் TSMC, மெக்கின்சி & கம்பெனி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், போஸ்டன் கன்சல்டிங் குரூப், ஹோண்டா ஜப்பான், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும்.
இதற்கிடையில் 1500 சலுகைகளில், 75 பேர் வெளி நாடுகளிலும், இதில் 25 பேர் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளத்திற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
ஆஃபர்கள் அதிகரிப்பு
கடந்த 2021 - 22ல் மொத்த சர்வதேச அளவில் 66 பேர் ஆஃபர் லெட்டர்களை பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 9வது நாளாக 71 ஆஃபர்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த வெளிநாட்டு சலுகைகளில் ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அதிகளவில் உள்ளதாக வேலை வாய்ப்பு குழுவானது தெரிவித்துள்ளது.
எந்த நாடுகள்
இதே 2021 - 22ம் ஆண்டில் ஐஐடி பாம்பேவில் அதிகளவில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா, ஜப்பான், யு ஏ இ, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் 66 சர்வதேச சலுகைகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒருவரே பல ஆஃபர்கள்
9 நாட்களில் நடைபெற்ற இந்த கேம்ப்ஸ் இண்டர்வியூக்களில் 1500 சலுகைகளில், 1224 சலுகைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 71 சர்வதேச சலுகைகளில் 64 ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் இந்த கேம்பஸ் இண்டர்வியூக்களில் பல ஆஃபர்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

இந்திய குடும்பங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? மொத்தமா Gen Z பசங்க கையில எடுத்துகிட்டாங்க!!

வங்கி வேலைகளிலும் கை வைக்கும் ஏஐ..!! முதல் கட்டமாக 20,000 பேரின் வேலை காலி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications