ஐஐடி பாம்பே சமீபத்தில் தனது வருடாந்திர வேலை வாய்ப்பு சுற்றுகளை தனது மாணவர்கள் மத்தியில் நடத்தியது, இதில் யாரும் எதிர்பார்க்காத வரையில் 3.7 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளமும், சர்வதேச வேலைவாய்ப்பை ஒரு மாணவர் தட்டிச்சென்றுள்ளார். இதேபோல் உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிகப்படியாக வருடம் 1.7 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஐஐடி பாம்பே கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடந்திர சம்பளம் 2.1 கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 3.7 கோடி ரூபாய் சம்பளம் என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டில் உள்நாட்டு சம்பளமாக 1.8 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 1.7 கோடி ரூபாய் அளவில் குறைந்துள்ளது. கொரோனா தொற்று கால பாதிப்பில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூ தேர்வு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல் வர்த்தக சந்தை பாதிப்பால் இந்தியாவில் சம்பள அளவுகள் பாதித்துள்ளது என்பதும் தெரிகிறது.
ஐஐடி பாம்பே கல்லூரியின் கேம்பஸ் வேலைவாய்ப்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அதிகப்படியான மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதேபோல் இந்த வருடம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் சராசரி சம்பளம் கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களை விட சற்று அதிகமாக உள்ளது.
ஐஐடி பாம்பே கல்லூரியின் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சீசனுக்கான சராசரி சம்பளம் (CTC) ஆண்டுக்கு ரூ.21.8 லட்சமாக இருந்தது. இது முந்தைய இரண்டு ஆண்டுகளில், 2021-22 மற்றும் 2020-21ல் ரூ.21.5 லட்சம் மற்றும் ரூ.17.9 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி பாம்பே கல்லூரியின் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சீசனில் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் சுமார் 16 பேருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதோடு மொத்தம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு 194 மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 65 சர்வதேச வேலைவாய்ப்புகளும் அடங்கும், ஒரு சில மாணவர்கள் ஒன்றுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்களில் இருந்து வந்துள்ளன.
ஐஐடி பாம்பே இரண்டு கட்டங்களாக வேலை வாய்ப்புகளை நடத்துகிறது, முதலாவது டிசம்பரில் மற்றும் இரண்டாவது ஜனவரி மற்றும் ஜூன்/ஜூலை இடையே.
இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சீசனில் 97 கோர் இன்ஜின்யரிங் நிறுவனங்கள் சுமார் 458 மாணவர்களை துவக்க நிலை பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்த வருடம் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு நிறுவனமாக இருந்தது.
ஐடி துறை சுமார் 88க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 302 மாணவர்களுக்கு வேலைகளை வழங்குவதன் மூலம், இரண்டாவது பெரிய ஆட்சேர்ப்பு நிறுவனமாகத் தொடர்ந்து உள்ளது. இருப்பினும், ஐடி மற்றும் மென்பொருள் பணியமர்த்தல் முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளது.
மேலும் ஐஐடி பாம்பே கல்லூரியில் B.Tech, dual-degree மற்றும் M.Tech மாணவர்களில், வேலை வாய்ப்புகளில் பங்கேற்பவர்களில் கிட்டத்தட்ட 90% பேர் வேலைகளைப் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, 2022-23 வேலை வாய்ப்புப் சீசனில் மொத்த மாணவர்களில் 82% பேர் அதாவது 1,845 பேரில் 1,516 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications