இந்திய மாணவர்கள் தற்போது படிக்கும்போதே தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி உலகின் கவனத்தைப் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி ஐஐடியில் படிக்கும் மாணவர் ஒருவர் உலக அளவில் நடந்த கோட்விட்டா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் இந்த போட்டியில் வென்றதன் மூலம் $10,000 பரிசு கிடைத்ததோடு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஐஐடி மாணவர்
டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படிக்கும் மாணவர் கலாஷ் குப்தா உலக அளவில் நடந்த கோட்விட்டா (CodeVita) என்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஒரு லட்சம் போட்டியாளர்கள்
டெல்லி ஐஐடியில் மூன்றாமாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படித்து வரும் மாணவர் கலாஷ் குப்தா 87 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் என டாடா கன்சல்டன்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஐஐடியில் படிப்பு
2018 ஆம் ஆண்டு ஐஐடியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் தேசிய அளவில் மூன்றாவது இடம் பெற்ற கலாஷ் குப்தா,டெல்லி ஐஐடியில் படிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் டெல்லி மண்டலத்தில் அவர் தான் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
இந்த நிலையில் சர்வதேச அளவில் நடக்கும் கோட்விட்டா போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 4 டிசிஎஸ் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு இன்டர்ன்ஷிப்பை அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உலக அளவிலான கோட்விட்டா போட்டியில் கலாஷ் குப்தா வெற்றி பெற்றதையடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் இண்டர்ன்ஷிப் வாய்ப்பை கலாஷ் குப்தா பெற்றுள்ளார்.
வாழ்த்து
மேலும் கலாஷ் குப்தா கோட்விட்டா போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து டெல்லி ஐஐடி இயக்குனர் ரங்கராஜன் அவர்கள் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாகமும் கலாஷ் குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
21 இந்திய மாணவர்கள்
பல்வேறு பல்கலைக் கழகத்தை சேர்ந்த 21 இந்திய மாணவர்கள் இந்த கோட்விட்டா போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதல் இடத்தை இந்தியாவின் கலாஷ் குப்தா பெற்ற நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை சிலி மற்றும் தைவான் நாட்டை சேர்ந்த மாணவர்கள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கவில்லை
தான் இந்த போட்டியில் வென்றது குறித்து கருத்து கூறிய கலாஷ் குப்தா, 'நான் போட்டியை தொடங்கிய போது முதல் மூன்று இடங்களுக்குள் வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் என்னுடைய திறமை, அனுபவம் முழுவதையும் இந்த போட்டிக்காக செயல்படுத்தியதால் தற்போது போட்டியில் வென்றதோடு, $10,000 பரிசு கிடைத்ததால் நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்.
நல்ல ரிசல்ட்
ஆரம்பத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை என்றாலும், இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போது நான் எதிர்பார்த்ததைவிட எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. ஒவ்வொரு படியாக நான் முன்னேறும் போது கண்டிப்பாக முதல் மூன்று இடங்களில் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்' என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications