இந்திய வின்வெளிய ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ-வின் சந்திரயான் திட்டத்தை உலகமே வியந்து பார்த்த நிலையில், இந்த மாபெரும் வெற்றியில் பணியாற்றிய அனைவரையும் இந்திய மக்கள் பாராட்டித் தள்ளினர். ஆனால் இஸ்ரோ அமைப்பின் சேர்மேன் எஸ்.சோமநாத் சமீபத்திய பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
எஸ்.சோமநாத் சமீபத்தில் செய்தி சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், இஸ்ரோ அமைப்பிற்கு இந்தியாவின் மிகவும் மதிப்புக்குரிய கல்லூரிகளான ஐஐடி போன்ற பிற கல்லூரிகளில் இருந்து திறமையான இன்ஜினியர்கள் சேர மறுக்கிறார்கள் என எஸ்.சோமநாத் இந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

இஸ்ரோ-வில் சிறந்த திறமைகளைக் கொண்டவர்கள் பொறியாளர்களாக இருக்க வேண்டும், அவர்கள் ஐஐடி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இஸ்ரோ-வில் இருந்து ஐஐடி கல்லூரி-க்கு இண்டர்வியூவ்-க்கு சென்றால் யாரும் பணியில் சேர வருவது இல்லை என வருத்தத்துடன் எஸ்.சோமநாத் இந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
ஐஐடி-யில் இருந்து இஸ்ரோ-வுக்கு மிகவும் சிறிய அளவினவர்கள் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் சேர்கிறார்கள், ஆனால் அதன் அளவு மிகவும் குறைவு, சொல்லப்போனால் 1 சதவீதத்திற்கும் குறைவான அளவு மட்டுமே என எஸ்.சோமநாத் இந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
ஐஐடி கல்லூரி மாணவர்கள் இஸ்ரோ-வில் சேர மறுக்க முக்கியமான காரணம் சம்பளம் தான் எனவும் எஸ்.சோமநாத் தெரிவித்தார். இண்டர்வியூவ்-க்கு வரும் மாணவர்கள் அனைவரின் முன்னிலையிலும் சிறப்பான திட்டத்தை முன்வைத்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் இஸ்ரோ-வில் கட்டாயம் கிடைக்காது.
சொல்லப்போனால் ஐஐடி கல்லூரியில் இருந்து சேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பில் சேரும் டாப் 50 சதவீத பிரஷ்ஷர் மாணவர்களின் ஆரம்பச் சம்பளம், இஸ்ரோ-வின் சேர்மேன் ஆக இருக்கும் சோமநாத் கூடக் கிடைக்காது என்பது தான் உண்மை. அப்படி எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது..?
சமீபத்தில் ஐஐடி பாம்பே கல்லூரியில் வருடாந்திர கேம்பஸ் இண்டக்வியூவ்-ல் யாரும் எதிர்பார்க்காத வரையில் 3.7 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளமும், சர்வதேச வேலைவாய்ப்பை ஒரு மாணவர் தட்டிச் சென்றார். இதேபோல் உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிகப்படியாக வருடம் 1.7 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
ஐஐடி பாம்பே கல்லூரியின் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூவ்-ல் தேர்வான மாணவர்களின் சராசரி சம்பளம் (CTC) வருடத்திற்கு ரூ.21.8 லட்சம். இதேபோல் ரூ.1 கோடிக்கும் அதிகமான சம்பளத்துடன் சுமார் 16 பேருக்கு இந்த வருடம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மறுபுறம் இஸ்ரோ-வில் பொறியாளர்களுக்கு மாதம் ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை சம்பளம் பெறுகிறார்கள். இதுவே மூத்த விஞ்ஞானிகளுக்கு ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம், இஸ்ரோவின் அதி திறமையான விஞ்ஞானிகள் மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள். சிறந்த விஞ்ஞானிகளுக்கு ரூ. 1,82,000 மற்றும் H பிரிவு பொறியாளர்களுக்கு மாதம் ரூ. 1,44,000 வரையிலான சம்பளம் பெறுகிறார்கள்.
சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநர் பி வீரமுத்துவேல் அவருடைய அனுபவம், பதவி உயர்வு ஆகியவற்றை வைத்துக் கணக்கிட்டால் மாதம் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான சம்பளம் பெறுவார்.
இஸ்ரோ அமைப்பின் தலைவரான எஸ் சோமநாத் போன்ற மூத்த அதிகாரிகளுக்குச் சம்பளத்தைத் தாண்டி தங்குவதற்கான வீடு, கார், உதவியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், போக்குவரத்துச் செலவுகள், எரிபொருள் செலவுகள், போன் பில், இண்டர்நெட் பில் போன்ற பல சலுகைகள் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் 4-5 லட்சம் பெறக் கூடும்.
இந்தச் சம்பள வித்தியாசம் காரணமாகத் தான் ஐஐடி மாணவர்கள் இஸ்ரோ அமைப்பில் சேர மறுப்பதாக ஏற்கனவே கருத்து நிலவினாலும், இதை இஸ்ரோ அமைப்பின் தலைவரான எஸ் சோமநாத் பேச்சு மூலம் உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications