இதையெல்லாம் செய்யணுமா அப்படின்னு சில விஷயங்களை தோணும். ஆனா செஞ்சுட்டா அதைவிட பெருசா எதுவுமே நமக்கு வெற்றியை தராது. அப்படித்தான் நல்ல வேலையை ஒருவர் உதறி தள்ளிட்டு இன்னிக்கு 44 கோடி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்காரு. அவர் அப்படி என்ன செஞ்சாரு? யார் இவர்? அப்படிங்கற எல்லா விவரங்களையும் இந்த பதிவுல பார்ப்போம்.
2000-ஆம் ஆண்டு எல்லா பொறியாளர்களுக்கும் என்னென்ன ஆசை இருக்குமோ? அதே ஆசைதான் கிஷோருக்கும் இருந்தது. அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு இன்டெல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கனடா, ஜப்பான் என பல நாடுகளுக்கு பயணம் செய்து குவாலிட்டி கண்ட்ரோல் குறித்த அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டார். ஆனால் 2012-ஆம் ஆண்டு கிஷோரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தனது கார்ப்பரேட் வாழ்க்கை அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்போதுதான் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என முடிவு செய்தார்.

எளிதில் முடிவெடுத்து விடலாம் ஆனால் அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க சற்று நேரம் எடுக்கும் அல்லவா? அதே தான் கிஷோரின் கதையிலும் நடந்தது. கிஷோர் நன்றாக யோசித்தார்.. எந்த தொழில் தனக்கு செட் ஆகும் என்பதை தீர்மானிக்க அவருக்கு நேரம் எடுத்தது. பின்னர் பால்பண்ணை தான் தனது உண்மையான விருப்பம் என்பதை உணரத் சித்தார்த்தின் பெயரில் "சித் ஃபார்ம்" என்ற பால் பண்ணையை தொடங்கினார். அதற்காக ரூ.1 கோடி ரூபாய் முதலீடு செய்தார். 20 மாடுகளுடன் இந்த பண்ணையை ஆரம்பித்தார்.
எந்த ஒரு தொழிலை எடுத்துக் கொண்டாலும் உடனே வெற்றி கிடைத்து விடாது. பிசினஸ்-இன் பேசிக் ரூல் என்னவோ 5 வருடங்களுக்கு நீங்கள் எந்த வித லாபத்தையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான். 5 வருடம் உங்கள் பிசினஸை நம்பி ஆரம்பிக்கக்கூடாது. அதன் பிறகு தான் படிப்படியாக வளர்ச்சியை எட்ட முடியும். ஆரம்பத்தில் கிஷோருக்கு பல சவால்கள் ஏற்பட்டது. 2014-ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த பால் பண்ணை திவால் ஆகிவிடும் நிலையும் ஏற்பட்டது.
ஆனால் அப்போதும் கிஷோர் மனம் தளரவில்லை. விடாமுயற்சியும் நம்பிக்கையும் மட்டுமே கொண்டு உழைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு படிப்படியாக தரமான பால் கிடைக்கிறது என்று மக்கள் வாய் வார்த்தையாக பேச தொடங்கினர். இதுவே ஒரு மார்க்கெட்டிங் ஆக மாறியது. ஆரம்பத்தில் 10 லிட்டர் பால் மட்டுமே விற்கத் தொடங்கினார். ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் உற்பத்தி செய்கிறார். 10,000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதற்கு உள்ளனர்.
இன்று, சித் ஃபார்ம் 44 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், கிராமப்புறங்களில் 40 ஊழியர்களும், 150 பகுதி நேர விநியோக கூட்டாளர்களும் உள்ளனர்.
ஆரம்ப முதலீடு ரூ.1 கோடி என்று முன்பே பார்த்தோம். பிசினஸ் என்று வரும்போது பெரிய முதலீட்டை பார்த்து பயப்படாமல் தைரியமாக இறங்கி இன்று தனது நிறுவனத்தை இவ்வளவு பெரிய உயரத்தை எட்ட வைத்திருக்கும் கிஷோர், பல தொழில் முனைவோருக்கு ஒரு சிறந்த உதாரணம். செய்யலாமா? வேண்டாமா? தொழில் தொடங்கினால் லாபம் தருமா? என்றெல்லாம் எண்ணாமல் தனது அதிக சம்பளம் தரும் வேலையையே உதறி தள்ளிவிட்டு இன்று வெற்றிக்கனியை சுவைத்துக் கொண்டிருக்கிறார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications