நல்ல சம்பளம்.. ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லை.. பெற்றோரின் நிதி கட்டுப்பாடு குறித்து ஓபன் டாக்..!!

இன்று பல இளைஞர்கள் நல்ல கல்வியும், உயர்ந்த சம்பளமும் பெற்றும், தங்கள் சொந்த வாழ்க்கையை அமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், குடும்பம் என்ற பெயரில் நடக்கும் பொருளாதார கட்டுப்பாடு. இது வெளியில் வன்முறையாகத் தெரியாதாலும், உள்ளுக்குள்ளாக அவர்களின் சுதந்திரத்தையும் எதிர்காலத்தையும் அழிக்கிறது.

இணையத்தில் சமீபத்தில் வைரலான ஒரு பதிவில், ஒரு இளம் மென்பொருள் நிபுணர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். உயர்கல்வி முடித்து, ஒரு பெரும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், அதில் ஒவ்வொரு ரூபாயும் எங்கே செல்கிறது என்பதையும், எவ்வளவு சேமிக்கலாம் என்பதையும் முடிவெடுக்க அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

நல்ல சம்பளம்.. ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லை.. பெற்றோரின் நிதி கட்டுப்பாடு குறித்து ஓபன் டாக்..!!

கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர்களின் கட்டுப்பாடுகளால் அவரது வருமானத்தை தானாக நிர்வகிக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இளம் நபர்கள் பலர் தங்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை வீட்டிற்கே கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதை எதிர்க்கும் போது "உன் வளர்ச்சிக்கு நாங்கள் துணையாக இருந்தோம்.. இப்போது நீ குடும்பத்துக்குத் துணையாக இருக்க வேண்டிய காலம்" போன்ற உணர்வுப்பூர்வமான பேச்சுக்களால் அடக்கி விடுகின்றனர். தன்னை வளர்த்த பெற்றோருக்குத் துணை நிற்பது தவறு இல்லை. ஆனால், தானாக முடிவெடுக்க முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

அந்த இளம் மென்பொருள் நிபுணர் வெளியிட்டிருக்கும் ரெடிட் தள பதிவில், அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படித்து, கடுமையாக உழைத்து, இந்தியாவின் மிக பிரபலமான பொறியியல் நுழைவுத் தேர்வான JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) வாய்ப்பு கிடைத்தது. இதுவே வாழ்க்கையின் மோசமான பக்கங்களில் இருந்து ஓரளவு மீளச்செய்தது.

ஆனால், பிறகு நடந்தது அதைவிட மிகக் கடுமையானது. எங்கள் குடும்பத்தில் பணம் இருக்கிறதா இருக்குது. ஆனா, என் கல்விக்காக அப்பா ரூபாய் கூட செலவழிக்கல" என்கிறார் அந்த இளம் மென்பொருள் நிபுணர். ரூ.11 லட்சம் கல்விக்கடனைத் தன் பெயரிலேயே எடுத்துக்கொள்ள தந்தை கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். குடும்பத்துக்கு அந்த அளவுக்குத் திறன் இருந்தும், மாணவன் கடனின் பாதிப்புடன் தனியாகத் தள்ளப்பட்டார்.

கல்வி முடிவடையும் காலத்தில், ஒரு முக்கிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 10 மாதங்களுக்கு, மாதம் ரூ.80,000 ஊதியத்தில் இன்டெர்ன்ஷிப் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த தொகையையும் அவரது தந்தை முழுமையாகக் கோரியதாகவும், "வீடு வாங்குவதற்கான முதலீடு" என்று கூறி, ஒரு ருபாயும் அவரிடம் விட்டு வைக்கவில்லை என்றும் அந்த இளைஞர் வேதனடையும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்புகள் என் வசத்தில் இருந்தாலும், வாழ்க்கை என்னுடையதா என்ற கேள்விக்கே பதில் இல்லை என்கிறார் அந்த இளைஞர். ஒரே மாதத்தில், பெற்றோர் அவரிடம் மாதம் ரூ.1.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியதாக கூறுகிறார். அடுத்த ஒரு வருடத்திற்குள், தனது வருமானத்தின் பெரும்பாலான பங்கை முழுமையாக பெற்றோரிடம் கொடுத்துவிட்டதாகவும், தனக்கு சேமிப்போ முதலீடோ எதுவும் செய்யவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

வேலை தூர வேலைக்கு மாறியபோது, அவர் சில மாதங்கள் வீட்டில் தங்கியிருந்தார். ஆனால், அப்போது கட்டுப்பாடுகள் தீவிரமானதால், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அந்த இளைஞருக்கு ஏற்பட்டது. இரு மாதங்களுக்குப் பிறகு, பெற்றோர் ஒரு புதிய அப்பார்ட்மெண்ட் வாங்கப் போவதாக தகவல் தெரிவித்தனர். ஆரம்பத்தில் பணம் பற்றிய உரையாடல்கள் தவிர்க்கப்பட்டாலும், மீண்டும் அழுத்தம் தொடங்கியது.

அவருடைய கூற்றுப்படி, அவர் ஏற்கனவே ரூ.20 லட்சத்தை அந்த வீட்டின் முன்பணமாக பெற்றோருக்கு கொடுத்திருந்தார். ஆனால், மேலும் பணம் கொடுக்கத் தயங்கியபோது, "நாங்கள் உன்னை வளர்த்தோம்... உன் படிப்புக்காக எவ்வளவு தியாகம் செய்தோம்" என்கிற வார்த்தைகளால் அந்த இளைஞரை அப்படியே ஆஃப் செய்துவிட்டனர்.

நீண்ட கால மன அழுத்தத்திற்கும் நிதிக் கட்டுப்பாடுகளுக்கும் பிறகு, ஒரே ஒரு உரையாடல் அந்த இளம் மென்பொருள் நிபுணரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. 14 மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களை சந்தித்தபோது, அவர்களுடன் நடந்த சாதாரண உரையாடலில்தான் ஒரு முக்கிய முடிவு பிறந்தது.

"அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்கு?" என்று தந்தை கேட்டாராம். பின்னர், "புதிய மாடிப்படுக்கைக்கு ரூ.2 லட்சம் அனுப்பு" என்று கேட்டதோடு, "இனி பண நிர்வாகத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என அவர் கூறியதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். "அந்த கேள்வியும், அந்த நிமிஷமும், என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் முடிவு செய்தது" என்கிறார் அந்த இளைஞர்.

இப்போது தனது 20 வயதில் இருக்கும் அந்த இளைஞர், பெற்றோர்களுடன் எந்தவொரு நிதிச் சுமையிலும் பங்களிக்காமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் முழுமையாகத் தங்களைத் தாங்களே சுயமாகத் தாங்கக்கூடியவர்களே. எனக்கு இனி எந்த கடமையும் இல்லை என்கிறார் அவர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+