ஒரு வருடத்திற்கு ரூ.2.4 கோடி சம்பளம்.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து விட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவது என்பது பெறும் போராட்டமாக இருக்கும் நிலையில், பெரும் கல்வி அமைப்புகள், அரசு கல்லூரிகள், குறிப்பாக ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்குக் கோடிகளில் சம்பளம் கொடுப்பது இயல்பு.

ஆனால் 2022 ஆம் ஆண்டுக்கான கேம்பஸ் இண்டர்வியூவ்-ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாணவருக்குச் சுமார் 2.4 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வருடத்திற்கு 2.4 கோடி ரூபாய் சம்பளம் என்றால் மாதம் 20 லட்சம் ரூபாய். இன்று இந்தியாவில் 90 சதவீதம் பேர் 20 லட்சம் ரூபாய்க்குக் கீழ் தான் மாத சம்பளம் பெறுகின்றனர். யாரு சாமி நீ..!!!

 சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. ஓரே நாளில் ரூ.2.02 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு.. ஓரே நாளில் ரூ.2.02 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

ஐஐடி கவுகாத்தி

ஐஐடி கவுகாத்தி

ஐஐடி கவுகாத்தி கல்லூரி 2022-23 கல்வியாண்டுக்கான முதல் கட்ட பிளேஸ்மென்ட் முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த முதல் சுற்றில் அதிகபட்ச சம்பளமாக ஒரு மாணவருக்கு 2.4 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அமேசான், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்

அமேசான், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்

ஐஐடி கவுகாத்தி கல்லூரியில் அமேசான், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டில் தத்தம் நிறுவனங்களில் பெருமளவிலான பணிநீக்கங்கள் இருந்தபோதிலும் இக்கல்லூரியில் இருந்து பட்டதாரிகளுக்கு அதிகச் சம்பளத்தில் வேலைவாய்ப்பை அளித்துள்ளது.

CSE பாட பிரிவு

CSE பாட பிரிவு

2022 ஆம் வேலைவாய்ப்புச் சுற்றில் ஐஐடி கவுகாத்தி கல்லூரியில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும், அதிகச் சம்பளத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றது CSE பாட பிரிவு (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்) மாணவர்கள் தான். ஐஐடி கவுகாத்தி கல்லூரியின் CSE பிரிவு மாணவர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்ததாக இக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

கடந்த ஆண்டு உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் அதிகப்படியான பணிநீக்கம் இருந்த போதிலும் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை சற்று அதிகம் என்றால் மிகையில்லை.

சராசரி சம்பள அளவு

சராசரி சம்பள அளவு

2022 ஆம் வேலைவாய்ப்புச் சுற்றில் ஐஐடி கவுகாத்தி கல்லூரியில் CSE பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பின் சராசரி சம்பள அளவு 41 லட்ச ரூபாய், 2021ல் இதன் அளவு 28 லட்சம் ரூபாய் மட்டுமே. இதன் CSE பாட பிரிவு மாணவர்களுக்கு எவ்வளவு டிமாண்ட் உள்ளது.

2.4 கோடி ரூபாய் சம்பளம்

2.4 கோடி ரூபாய் சம்பளம்

இதை விட முக்கியமாக ஐஐடி கவுகாத்தி கல்லூரியின் CSE பிரிவு மாணவர் ஒருவருக்குச் சுமார் 2.4 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்பிரிவு மாணவர்கள் ஐடி மற்றும் டெக் சேவை பிரிவில் மட்டும் அல்லாமல் வங்கியியல், டிசைன் பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.

 முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

ஐஐடி கவுகாத்தி கல்லூரியில் இந்த வருடம் BNY Melon, Goldman Sachs, Bank of America, American Express, மற்றும் Square Point போன்ற முதலீட்டு வங்கி மற்றும் நிதியியல் சேவை பிரிவு நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவில் இடம்பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்கள் பிரிவில் ரிலையன்ஸ், பஜாஜ், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற நிறுவனங்களும் இடம்பெற்று உள்ளது. பிற நிறுவனங்கள் பட்டியலில் Rubrik, Infurnia, Cohesity, Thoughtspot, Alphagrep, Rakuten, Shimizu, மற்றும் Samsung ஆகியவை இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIT Guwahati CSE Student got job with Rs 2.4 crore salary package

IIT Guwahati CSE Student got job with Rs 2.4 crore salary package ஒரு வருடத்திற்கு ரூ.2.4 கோடி சம்பளம்.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவர்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X