ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு லெஹெங்கா கடையை திறங்க... ஐஐடி பட்டதாரி பகீர் அட்வைஸ்

பொதுவாக பெண்கள் கல்யாணம், பண்டிகை சமயங்களில் பெரும்பாலும் சேலைகள் அணிவது வழக்கம். ஆனால் இப்ப கொஞ்சம் டிரெண்ட் மாறி விட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் பெரும்பாலான பெண்கள் விசேஷ தினங்களில் புடவைகளுக்கு பதில் லெஹெங்கா ஆடையை அணிய தொடங்கி விட்டனர்.

புடவைகளை போலவே இதுவும் பிரம்மாண்டமான தோற்றத்தை தருவதோடு, தனித்துவமாக காட்டுகிறது. இதனால் பெண்கள் இந்த ஆடையை விரும்பி அணிய தொடங்கி விட்டனர். தற்போது வடமாநிலங்களில் இதன் விற்பனையும் சக்கை போடு போடுகிறது.

ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு லெஹெங்கா கடையை திறங்க... ஐஐடி பட்டதாரி பகீர் அட்வைஸ்

இந்நிலையில், சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு லெஹெங்கா விற்பனை செய்யுங்க, நல்லா சம்பாதிக்கலாம் என்று இளைஞர்களுக்கு ஐஐடி பட்டதாரி ஒருவர் அட்வைஸ் பண்ணி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்தவர் அமித் ஜக்லன், இவர் கவுகாத்தி ஐஐடியில் பட்டம் பெற்றவர். அழகு, வீட்டு அப்ளையன்ஸ் அண்ட் எலக்ட்ரானிக் ரீபேர்ஸ் சேவைகள் வழங்கும் நிறுவனமான அர்பன் கம்பெனி நிறுவனத்தில் டிசைன் இயக்குனராக இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை அவரை யாருக்கும் பெரிய அளவில் தெரியாது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் எக்ஸில் போட்ட ஒரு டிவிட் பெரும் விவாதத்தை கிளப்பியதோடு அவரையும் பிரபலமாக்கி விட்டது.

அப்படி என்னதான் டிவீட் போட்டார்னு கேட்குறீங்களா? கடந்த 2ம் தேதியன்று அமித் ஜக்லன் எக்ஸில் (முன்பு டிவிட்டர்), சாந்தினி சவுக்கில் 2 மணி நேரம் மட்டுமே இருந்தேன். நான் வார்த்தைகளை இழக்கிறேன், கவுண்டர்களிலிருந்து பறக்கும் ரூ.1 லட்சம் லெஹெங்காக்கள்.

ஒரு அறிவுரை, உங்கள் சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு லெஹெங்காக்களை விற்கவும் என்று பதிவு செய்து இருந்தார். அதாவது, டெல்லியின் பிரபலமான வணிக சந்தையான சாந்தினி சவுக்கில் அவர் இரண்டு மணி நேரம் நின்றுள்ளார். அப்போது கடைகளில் லெஹெங்கா ஆடைகள் அதிகளவில் விற்பனையாவதை பார்த்து திகைத்துள்ளார்.

இதனையடுத்து சாப்ட்வேர் வேலையில் சம்பாதிப்பதை காட்டிலும் லெஹெங்கா ஆடை கடை திறந்தால் நல்ல சம்பாதிக்கலாம் அதனால் உங்கள் ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு சாந்தினி சவுக்கில் லெஹெங்கா ஆடை கடையை திறங்க என்று அட்வைஸ் செய்து இருந்தார்.

இது சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஒருவர், சகோதரரை லெஹெங்காவை விற்பது போல், சாப்ட்வேர் ரைட்டிங் அவ்வளவு திறமையில்லாத லட்சக்கணக்கானவர்களால் செய்யப்படுவதில்லை என பதில் அளித்து இருந்தார்.

தொடர்ந்து விமர்சனங்கள் வந்ததையடுத்து, நான் சொன்ன அறிவுரை வேறுவிதமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, இந்தியாவில் எப்படி நல்ல வணிக வாய்ப்புகள் உள்ளன என்பதை விளக்குவதற்காக மட்டுமே அப்படி தெரிவித்து இருந்தேன் என்று அமித் ஜக்லன் விளக்கம் அளித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+