ரூ.4 கோடி சம்பளம்.. ஐஐடி மாணவர்களுக்கு ஜாக்பாட்.. வேலை எங்கு தெரியுமா?

சர்வதேச அளவில் நிலவி வரும் காலகட்டத்தில் இருக்கும் வேலை நிலைக்குமா? நிலைக்காதா? எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. பல நிறுவனங்கள் சம்பள குறைப்பும், பணியமர்த்தல் முடக்கம், சம்பளம் இல்லா விடுமுறை என பலவற்றையும் கொடுத்துள்ளன.

இந்த கடினமான காலகட்டத்தில் வேலை கிடைப்பது என்பதே கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தாலும் அதில் சம்பளம் போதியதாக இருக்குமா? என்பதும் பெரிய கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது.

சவாலான காலகட்டத்தில் அதிரடி

சவாலான காலகட்டத்தில் அதிரடி

ஆனால் இப்படி நெருக்கடியான காலகட்டத்திலும் இந்தியா ஐஐடி மாணவர்களுக்கு ஜாக்பாட் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் யாரும் நினைத்துக் கூடாத பார்த்திராத வகையில் கோடிக் கணக்கில் சம்பளத்தில் ஆஃபரை பெற்றுள்ளனர். இது குறித்தான முழு விவரங்களையும் பார்க்கலாம் வாருங்கள்.

 ஐஐடி மாணவர்கள்

ஐஐடி மாணவர்கள்

சர்வதேச தனியுரிம வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ஐஐடி டெல்லி., ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர் உள்ளிட்ட கிளைகளை சேர்ந்த 3 மாணவர்களை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு சம்பளம் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு புதிய சாதனை என்றே கூறலாம். சம்பளம் அதிகம் என்பது ஒரு புறம் என்றாலும், மறுபுறம் இந்த நெருக்கடியான காலகட்டட்தில், பற்பல டெக் ஜாம்பவான்களும் பணி நீக்கம் செய்து வரும் இந்த காலகட்டத்தில் இந்த அளவுக்கு தேர்வாகியிருப்பது சாதனை என்றே கூறலாம்.

ஜோன் ஸ்ட்ரீட் ஆஃபர்

ஜோன் ஸ்ட்ரீட் ஆஃபர்

இந்த அதிரடியான ஆஃபரை ஜோன் ஸ்ட்ரீட் நிறுவனம் முதல் நாளிலேயே கொடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. அதுவும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கொடுத்துள்ளது மேற்கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாய்ப்புகள் சரிவு

வாய்ப்புகள் சரிவு

டெக் நிறுவனங்கள் மெதுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில் நடப்பு ஆண்டில், சிறியளவிலேயே வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டினை காட்டிலும் சம்பளமும் குறைவாக இருக்கலாம். கடந்த ஆண்டு ஐடி நிறுவனங்கள் நிலவிய தேவைக்கு மத்தியில், அட்ரிஷனும் அதிகளவில் இருந்த நிலையில், கூடுதல் சம்பளத்தினை வாரி இறைத்தன.

மந்த நிலை

மந்த நிலை

ஏராளமான ஐஐடி மானவர்களுக்கு ஆஃபர்களை வாரி வழங்கின. ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலை கீழாக உள்ள நிலையில், அதுபோன்று இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மந்த நிலையின் தாக்கம் என்பது நிச்சயம் இருக்கலாம். இதனால் ஐஐடி கான்பூர்ம் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புகள் என்பது கடந்த ஆண்டு அதிகரித்தது. ஆனால் இந்த ஆண்டு அது கஷ்டமான ஒன்றாகவே இருக்கலாம்.

 இதுவரை கொடுக்காத அளவு சம்பளம்

இதுவரை கொடுக்காத அளவு சம்பளம்

எனினும் ஜோன் ஸ்ட்ரீட் நிறுவனம் ஐஐடி டெல்லி, கான்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட கிளைகளில் சில மாணவர்களை தேர்தெடுத்துள்ளது. இவர்களுக்கான சம்பளமும் இதுவரை இல்லாத அளவு என்றும் தெரிவித்துள்ளது.

ஐஐடி ரூர்க்கியில் 1.6 கோடி சம்பளமும், உள் நாட்டில் பணிபுரிய 1.3 கோடி சம்பளமும் அறிவித்துள்ளது. மொத்தத்தில் 6 பேருக்கு சர்வதேச அளவிலான பணி வாய்ப்பானது கிடைத்துள்ளது.

 

சென்னை நிலவரம் என்ன?

சென்னை நிலவரம் என்ன?

ஐஐடி சென்னையில் முதல் நாள் அமர்வில் 445 பேருக்கு வாய்ப்புகள் கிடைத்ததாகவும், கடந்த ஆண்டில் 407 ஆஃபர்கள் கிடைத்ததாகவும் அறிவிக்கபபட்டுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 10% அதிகம் எனலாம். இதில் 25 ஆஃபர்களுக்கு 1.1 கோடி ரூபாய் சம்பளமாக ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்த கேம்பஸில் 15க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் கலந்து கொண்டதாகவும், மாணவர்களுக்கு ஆஃபர்களை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த சீசன் முடிவதற்குள் இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உபெர் நிறுவனம் அதிகபட்சமாக 2.16 கோடி ரூபாய் சம்பளத்தினை வாரி வழங்கியது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+