ஊருக்கே பருப்பானாலும் வீட்டுக்கு தொடப்பகட்டைத் தான், என ராஜா ராணி படத்தில் சந்தானம் ஆர்யாவைக் கலாய்ப்பார். இது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும், ஊரே நம்மை பாராட்டினாலும், வீட்டில் அம்மா, அப்பா நம்மை தண்டச்சோறு எனத் திட்டுவது, உடன்பிறந்தவர்கள் நம்மை ஒரு பொருட்டாக நினைக்காதது போன்ற சூழ்நிலைகள் நிறைய நடந்திருக்கும்.
கிட்டத்தட்ட இதே சூழ்நிலையைத் தான் கூகுள், ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சையும் சந்தித்தார், ஆனால் இந்த கறையை தற்போது துடைத்துள்ளதைப் பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் தனது தந்தைக்கும், உலகிற்கும் அறிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார், ஆனால் அவர் பிஎச்டி படிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்பியதாகவும், இதை பெரும் குறையாகவே தனது பெற்றோர்கள் இன்றும் கூறுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு அவர் படித்த ஐஐடி காரக்பூர் கல்லூரியால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற விழாவில், அறிவியல் துறையில் சிறந்த சாதனை புரிந்தவருக்கு வழங்கப்படும் "டாக்டர் ஆஃப் சயின்ஸ் (Honoris Causa) என்ற கவுரவ பட்டத்தைப் பெற்றார்.

இதே விழாவில், அவரது மனைவி அஞ்சலி பிச்சை அவர்களுக்கும் வேதியியல் பொறியியலில் சிறப்பான பங்களிப்பைச் செய்தமைக்காக "சிறந்த பழைய மாணவர் விருது" வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சுந்தர் பிச்சை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவில், டாக்டர் பட்டம் பெறுவதில் தன்னைவிட, தனது பெற்றோர் அதிகம் விரும்பினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கவுரவ டாக்டர் பட்டமும் டாக்ட்ரேட் பட்டத்திற்கு இணையானது என நினைக்கிறேன் எனக் கூறி தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், அவர் தற்போது தான் இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் தனது கல்லூரியான ஐஐடி காரக்பூருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு விழாவில் ஐஐடி காரக்பூர் இயக்குநர் VK தேவாரி, பிச்சையின் பெற்றோர் மற்றும் மகள் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சுந்தர் பிச்சையின் பதிவுக்கு பலரும் பல விதிமாக பதிலளித்துள்ளனர், அதில் ஒரு பயனர், "பெற்றோர்கள் எல்லோரும் ஒன்றுதான். சுந்தர் பிச்சை இன்று யாராக இருந்தாலும், டாக்டர் பட்டம் இல்லாமல் அவரது பெற்றோர் திருப்தி அடைய மாட்டார்கள். தங்கள் பிள்ளைகள் மேலும் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் எப்போதும் விரும்புவார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு எக்ஸ் பயனர், "இந்த விருதுக்கு நீங்கள் நிச்சயம் தகுதியுடையவர், நீங்கள் முழுநேர முனைவர் பட்டம் பெறுவதை விட அதிகமாகச் சாதித்துள்ளீர்கள்," என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் 1970 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி சுந்தர் பிச்சை பிறந்தார். மதுரையில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் துவங்கிய சுந்தர் பிச்சையின் பயணம், தற்போது உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள்-க்கு தலைமை தாங்குவது வரையில் சென்றுள்ளது. சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை ஜிஇசி நிறுவனத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியராக வேலை பார்த்தார். தாயார் லட்சுமி ஒரு ஸ்டெனோகிராபர்.
மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த சுந்தர் பிச்சை, சென்னையில் உள்ள ஜவாஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி ஸ்கூலில் மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்தார். பிளஸ் டூவை ஐஐடி சென்னையில் உள்ள வனவாணி ஸ்கூலில் படித்தார். ஐஐடி காரக்பூரில் உலோகவியல் மற்றும் பொருள் பொறியியலில் பட்டம் பெற்றார். அதன் பின்பு அமெரிக்கா சென்று மேற்படிப்பை படித்து கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications