இந்தியாவை சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி என்பவர் தற்போது உலகின் மிகப்பெரிய கிளவுட் ஸ்டோரேஜ் நிறுவனமான ஸ்னோ ஃபிளேக் (Snowflake)இன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் ஆவார். தான் எப்படி இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறினேன் என்பது குறித்து தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் இவர் பதிவு செய்துள்ளார்.
இந்த வேலைக்கு நான் பொருத்தமானவனாக இருப்பேனா அல்லது இந்த வேலைக்கு நான் தகுதியானவனா என எண்ணக்கூடிய வகையிலான எதிர்பார்க்காத வேலை வாய்ப்புகள் பல எனக்கு கிடைத்தன, அவற்றை நான் தயங்காமல் ஏற்றுக் கொண்டே அதுதான் என்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது என ஸ்ரீதர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

57 வயதான கூடிய அவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் This is Working என்ற பெயரில் தன்னுடைய பணி அனுபவங்கள், எப்படி பெரிய பெரிய நிறுவனங்களில் எல்லாம் தனக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து பதிவு செய்துள்ளார். அதில் நீங்கள் அடுத்தடுத்து உங்களுக்கு கிடைக்கும் பொறுப்புகளை தயங்காமல் ஏற்க வேண்டும் என கூறியுள்ளார். அப்பொழுதுதான் உங்களுக்கு ஒரு குழு என்றால் என்ன ,ஒரு குழுவாக எப்படி ஒரு விஷயத்தில் வெற்றி அடைவது என்பது குறித்து புரிதல் உண்டாகும். இது அடுத்தடுத்த பதவிகளுக்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் ஐஐடியில் படிப்பை முடித்தவர் தான் ஸ்ரீதர் ராமசாமி, இதனை அடுத்து அமெரிக்கா சென்ற அவர் அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகம் சென்று கல்வி பயின்றார். பின்னர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர் 2003 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தேடு பொறியான கூகுள் சர்ச் உருவாக்குவதில் முக்கியமான நபராக இருந்தார். அப்படியே படிப்படியாக தன்னுடைய வேலையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றார்.
8 ஆண்டுகளிலேயே மூத்த துணை தலைவர் என்று பதவிக்கு உயர்ந்தார். 2019 ஆம் ஆண்டு கூகுள் வேலையை விட்ட இவர், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேடுபொறியான நிவா என்ற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 2023 ஆம் ஆண்டு ஸ்னோ ஃபிளேக் நிறுவனம் நிவா நிறுவனத்தை வாங்கியது. இதனை அடுத்து ஸ்ரீதர் ராமசாமி ஸ்லோ ஃபிளேக் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணிக்கு சேர்ந்தார்.
தற்போது இவர் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார். இது தொடர்பாக பதிவு செய்துள்ள அவர், நான் அடுத்தடுத்து சென்ற வேலைகள் எல்லாமே இதற்கு முன்பு நான் செய்யாத வேலைகள் தான் என கூறியுள்ளார். சில நேரங்களில் நீங்கள் தீவிரமாக ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக தீவிரமாக உழைக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் இது எல்லா இடங்களிலும் வேலை செய்யாது என கூறியுள்ளார். திடீரென புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications