உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏஐ துறையில் தனது வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்கத் துவங்கிய நாள் முதல் அதிரடியான மாற்றங்களைச் செய்து வருகிறது. அதிலும் முக்கியமாக மைக்ரோசாப்ட் ஏஐ என்னும் புதிய பிரிவை உருவாக்கிய பின்பு தினமும் அதிரடிகள் தான்.
இந்த நிலையில் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான பவன் டவுலூரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இப்பிரிவை வழிநடத்திய பனோஸ் பனாய் வெளியேறியதைத் தொடர்ந்து பவன் டவுலூரி இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பனோஸ் பனாய் அமேசான் நிறுவனத்தில் சேர்வதற்காகக் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் நிர்வாகம் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்களை தனித்தனி தலைமையின் கீழ் பிரித்தது நிர்வாகம் செய்து வந்தது, டவுலூரி மேற்பார்வையின் கீழ் சர்பேஸ் பிரிவும், மைக்கேல் பரக்கின் கீழ் விண்டோஸ் பிரிவு இருந்தது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குள்ளேயே மைக்கேல் பரக்கின் புதிய பதவிகள், புதிய பணிகளைத் தேடி முடிவு செய்து Windows and Web Experiences (WWE) பிரிவின் கெவின் ஸ்காட் கீழ் சேர்ந்துள்ளார். இதனால் மீண்டும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் பிரிவுக்கு ஓரே தலைவராகப் பவன் டவுலூரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற பவன் டவுலூரி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டதன் மூலம் சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா வரிசையில் இவரும் வந்துள்ளார்.
ஐஐடி மெட்ரால் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பவன் டவுலூரி, அமெரிக்காவில் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற கையோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்து சுமார் 23 வருடமாக பணியாற்றி வருகிறார். Reliability Component Manager ஆக பணியில் சேர்ந்து தற்போது Microsoft Windows and Surface பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications