இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ ஜூன் காலாண்டில் முதல் முறையாக லாபத்தை பதிவு செய்து பங்கு முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது. சோமேட்டோ ஜூன் காலாண்டில் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பெற்ற நிலையிலும் லாபத்தை அடையும் பாதைக்கு வந்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சோமேட்டோ வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது அதன் டெலிவரி பார்ட்னர்கள் தான், இந்த நிலையில் அவர்களின் நலன், வருமானம் ஆகியவற்றை மேம்படுத்து சோமேட்டோ நிர்வாகம் அதிகளவிலான ஊனமுற்றோர்-களை பணியில் சேர்த்துள்ளது. இவர்கள் ஏதுவாக உணவுகளை டெலிவரி செய்ய சிறப்பு வாகனம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுக்குறித்து நெகிழ்ந்து Zomato சிஇஓ தீபிந்தர் கோயல் முக்கிய டிவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார்.

Zomato சிஇஓ தீபிந்தர் கோயல் செய்த டிவிட்டர் பதிவில், நிறுவனத்தில் தற்போது 160 ஊனமுற்றோர்கள் பணியாற்றி வரும் வேளையில் இவர்கள் அனைவரும் ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் இயங்கி வரும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய சிறப்பு வாகனத்தை பயன்படுத்தி டெலிவரி செய்து வருகின்றனர்.
இந்த 160 ஊழியர்கள் இதுவரையில் சுமார் 39000 ஆர்டர்களை டெலிவரி செய்து அசத்தியுள்ள நிலையில், டிசம்பர் 2023க்குள் இந்த எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம் என Zomato சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்தார். மேலும் இந்த சிறப்பு வாகனத்தை தயாரித்த நியோ மோஷன் மற்றும் HID குளோபல் ஆகிய நிறுவனங்களுக்கு பாராட்டுகள் எனவும் தெரிவித்தார்.
இதில் நியோ மோஷன் நிறுவனம் ஊனமுற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கை குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிட கூடாது என்பதற்காக சாதாரண மக்கள் போல் அனைத்து பணிகளையும் செய்யவும், பயணிக்கவும் ஏதுவாக வாகனங்களை சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டு இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.
சோமேட்டோ நிறுவனர் மற்றும் சிஇஓ தீபிந்தர் கோயல் நண்பர்கள் தினத்தில் சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு அவரே டெலிவரி செய்தார். இது மட்டும் அல்லாமல் டெலிவரி பார்ட்னர்கள், உணவகங்கள், வாடிக்கையாளர்களுக்கு பிரெண்ட்ஷிப் பேன்ட்-களை அவரே கொடுத்தார். தீபிந்தர் கோயல் அவ்வபோது அவரே உணவு டெலிவரி செய்வது வழக்கம்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications