ரூ 4.3 கோடி சம்பளம்.. IIT மாணவருக்கு கிடைத்த ரெக்கார்ட் பிரேக்கிங் வேலைவாய்ப்பு..!

இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) மெட்ராஸில் பயின்று வரும் மாணவர் அந்த கல்வி நிறுவனத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். உலகளாவிய வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ஹாங்காங் நடத்திய கேம்பஸில் "குவாண்டிடேட்டிவ் டிரேடர்" பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லூரிகளில் படிக்கும் போதே பல்வேறு நிறுவனங்களும் கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்தி அதன் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்வது வழக்கம். இது வருடா வருடம் நடைபெறும் ஒன்று. அப்படி இந்த ஐஐடி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ள பதவிக்கு ஆண்டு வருமானமாக ரூ.4.3 கோடி வழங்கப்படவுள்ளது.

இதற்கான ப்ரீ பிளேஸ்மெண்ட் ஆஃபரையும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த பதவியின் மூலம் அவருக்கு போனஸ், இடமாற்றம் போன்ற சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட பிளேஸ்மெண்ட்டில் இந்த அளவுக்கு அதிக சம்பளத்துடன் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.

 ரூ 4.3 கோடி சம்பளம்.. IIT மாணவருக்கு கிடைத்த ரெக்கார்ட் பிரேக்கிங் வேலைவாய்ப்பு..!

கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவருக்கு தான் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்த ஆஃபரை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் IT நிறுவனங்களில் போட்டித் தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் தகுந்த திறமையுள்ள மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நிறுவனங்கள் ஆசைப்படுகின்றன. அப்படித்தான் இந்த ஐஐடி மாணவரையும் தேர்வு செய்துள்ளனர். இவருக்கு வழங்கப்பட்ட சலுகை ஐஐடி வளாகத்தில் கல்வி பயிலும் பிற மாணவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பிளேஸ்மெண்ட் சீசனில் பல்வேறு பெரு நிறுவனங்களும் அதிக அளவிலான ஆஃபர்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளன. பிளேஸ்மெண்ட் வழங்கிய நிறுவனங்களில் பிளாக்ராக், க்ளீன் மற்றும் டாவின்சி போன்ற நிறுவனங்கள் ரூ. 2 கோடிக்கு மேல் பேக்கேஜ்களை வழங்கியுள்ளன.

அதே போல APT போர்ட்ஃபோலியோ மற்றும் ரூப்ரிக் ரூ. 1.4 கோடியும், எபுலியண்ட் செக்யூரிட்டீஸ் மற்றும் ஐஎம்சி டிரேடிங் ஆகியவை ரூ. 1.3 கோடியும், குவாடேய் ரூ. 1 கோடியும், குவாண்ட்பாக்ஸ் மற்றும் கிராவிடன் ரூ. 90 லட்சத்திலான ஆஃபரையும் வழங்கியுள்ளன. DE ஷா நிறுவனம் ரூ. 66-70 லட்சம், பேஸ் ஸ்டாக் ப்ரோக்கிங் ரூ. 75 லட்சம், மற்றும் ஸ்கொயர்பாயிண்ட் கேபிடல் ரூ.65 லட்சத்திலான ஆஃபரை வழங்கியுள்ளன. மைக்ரோசாப்ட் மற்றும் கோஹெசிட்டியும் ரூ.40-50 லட்சத்திலான ஆஃபரை வழங்கியுள்ளன.

முதல் நாள் பிளேஸ்மென்ட்டில் குவால்காம், மைக்ரோசாப்ட், கோல்டுமேன் சாக்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஓலா எலக்ட்ரிக், அல்பான்சோ போன்ற பெரு நிறுவனங்கள் பங்கேற்றன. டெல்லி, பம்பாய், மெட்ராஸ், கான்பூர், ரூர்க்கி, காரக்பூர், குவஹாத்தி மற்றும் BHU உள்ளிட்ட நிறுவப்பட்ட ஐஐடிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கட்ட பிளேஸ்மெண்ட் செயல்முறை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+