வெறும் ரூ.600ல் சென்னை டூ கொல்கத்தா வரை 3 மணிநேரத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கடலில் பறக்கும் படகு வடிமைப்புக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வெறும் 600 ரூபாய் கட்டணத்தில் 3 மணி நேரத்தில் பயணம் செய்வது என்பது கற்பனையாகத் தோன்றலாம், ஆனால் இந்தக் கனவு விரைவில் நிஜமாகவுள்ளது. எப்படியென்றால், ஐஐடி மெட்ராஸின் உதவியுடன், வாட்டர் ஃபிளை டெக்னாலஜி (Waterfly Technologies) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், கடலில் பறக்கும் வகையிலான புதிய படகு ஒன்றை வடிவமைத்து சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த பறக்கும் படகை electric seagliders என்று அழைக்கப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதைப் பொறுத்தவரை, Silicon Valley போட்டியிடுவதாகக் குறிப்பிட்டார். இந்த புதிய கண்டுபிடிப்பை பற்றி அவர் பதிவு செய்தது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் அது வைரல் ஆகியுள்ளது.
ஆனந்த் மகிந்த்ரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சி பற்றிய செய்திகள் வருகின்றன. இதில் எனக்குப் பிடித்தது நமது பரந்த நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்கான வாக்குறுதி மட்டுமல்ல, இந்த வாகனத்தின் வடிவமைப்பு மிகவும் அற்புதமானது என்பதும்தான்!"

முன்னதாக இது குறித்து வாட்டர் ஃபிளை டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் துணை நிறுவனருமான ஹரிஷ் ராஜேஷ் கூறுகையில், மின்சார seagliders-ளைப் பயன்படுத்தி இந்தப் பயணத்தை மலிவாகவும் வேகமாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இவை தண்ணீரில் இருந்து புறப்பட்டு நான்கு மீட்டர் உயரத்தில் பறப்பது போன்ற காற்றின் மேல் பறக்கும் Wing-in-Ground (WIG) படகாக இருக்கும். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கொல்கத்தாவிலிருந்து சென்னை வரை வெறும் ரூ. 600 ரூபாயில் 1,600 கிமீ பயணத்தை மேற்கொள்ளலாம் என்று ஹர்த் ராஜேஷ் கூறியிருந்தார். மேலும் இந்த விலை, AC மூன்றாம் வகை ரயில் டிக்கெட்டைவிட குறைந்த விலை ஆகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான கேசவ் சவுத்ரி கூறுகையில், இந்த தனித்துவமான வடிவமைப்பின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணத்தை விளக்கினார். இந்த சிறப்பு விமானம் நீரின் மேற்பரப்புக்கு மிகவும் அருகில் பறப்பதன் மூலம், க்ரவுண்ட் எஃபெக்ட்டை பயன்படுத்தும். இதன் மூலம் பறக்கும் பலகைகளில் friction வேகம் குறைய உதவும். மேலும், காற்றின் அழுத்தம் காரணமாக பறப்பதை அதிகரிக்கவும் செய்கிறது. இது குறைந்த வேகத்தில் கூட பறக்க முடியும்.
உதாரணமாக, ஒரு சாதாரண Airbus A320 அல்லது Boeing 737 விமானம், கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு பறப்பதற்காக 2.5 முதல் 3 டன் எரிபொருள் பயன்படுத்துகிறது, அதன் தற்போதைய விலை ஒரு கிலோலிட்டருக்கு சுமார் ரூ 95,000 ஆக உள்ளது. எனினும், Waterfly-வின் Seaglider இந்த செலவை கணிசமாக குறைக்க முடியும், இதன் விளைவாக, மிகவும் மலிவு விலையில் டிக்கெட் விலைகள் கிடைக்கும்.
அவர் மேலும் கூறுகையில், எங்களது வடிவமைப்பின் உற்பத்தி செலவு வழக்கமான விமானத்தை விட கணிசமாக குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். நாம் உயரமான உயரத்தில் பறப்பதில்லை என்பதால், குறைந்த காற்று அழுத்தத்துடன் போராட வேண்டியதில்லை, அதனால் எங்கள் விமானத்தை அவ்வளவு வலுவாக உருவாக்க வேண்டிய அவசியமில்லை. இது கட்டுமான செலவைக் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கிறது" என்று அவர் விளக்கினார்.
மேலும், இந்த விமானத்தின் இயந்திரம் வழக்கமான விமானங்களில் உள்ளதைப் போல சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. "ஓடுபாதை முடிவதற்குள் ஒரு விமானம் புறப்பட வேண்டும், ஆனால் நமக்கு முழு கடலும் உள்ளது. எங்களுக்கு, ஓடுபாதை என்பது எவ்வித முடிவும் இல்லாமல் உள்ளது. மேலும் இது இயந்திரத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டார்
தற்போது, இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஏரோ இந்தியாவில், நிறுவனம் அதன் வடிவமைப்பை மட்டுமே வழங்கியது. 100 கிலோ எடையுள்ள முதல் மாதிரி, அடுத்த சில மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு டன் முன்மாதிரி பறக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் 2025 ஆம் ஆண்டின் முடிவுக்குள் ஒரு டன் எடையுள்ள மாதிரி பறப்பதற்கு தயாராக இருக்கும். 2026 ஆம் ஆண்டுக்குள் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு பயணிக்கக்கூடிய 20 இருக்கைகள் கொண்ட மாதிரியை உருவாக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் நிதி உதவி வழங்கியுள்ளது, மேலும் நிறுவனம் இப்போது பாதுகாப்புத் துறையிலிருந்து மேலும் நிதி திரட்ட முயல்கிறது. எதிர்காலத்தில், இந்த தொழில்நுட்பம் சரக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications