கோடிகளில் புரளும் ஐஐடி மாணவர்கள்.. சம்பளத்தை வாரியிறைக்கும் நிறுவனங்கள்..!

இந்தியாவில் எப்படி டெக் ஊழியர்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறதோ, அதேபோல் ஐஐடி மாணவர்களுக்கு அனைத்துத் துறை நிறுவனங்களிலும் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. பொதுவாகவே இன்ஜினியரிங் மாணவர்களுக்கு இன்று வேலை கிடைப்பது என்பதும் பெரும் போட்டியாக இருக்கும் வேளையில், ஐஐடி மாணவர்களுக்கு நிறுவனங்கள் தேடிப் போய் வேலைவாய்ப்பைக் கொடுக்கிறது.

இதுமட்டும் அல்லாமல் ஐஐடி மாணவர்களுக்கான சம்பளத்தைக் கேட்கும் போது பிற இன்ஜினியரிங் மாணவர்களின் 5 வருட சம்பளத்தை ஓரே வருடத்தில் பெறுகிறார்கள்.

இந்நிலையில் இந்த வருடம் ஐஐடி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சம்பள அளவீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது என்றால் மிகையில்லை.

 கேம்பஸ் இண்டர்வியூவ்

கேம்பஸ் இண்டர்வியூவ்

இந்த வருடம் ஐஐடி மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூவ் துவங்கி 6 நாட்கள் ஆன நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும், வெளிநாட்டி வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 1 கோடி ரூபாய் சம்பளம்

1 கோடி ரூபாய் சம்பளம்

ஐஐடி கான்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி காரக்பூர், ஐஐடி வாரனாசி ஆகிய 4 கல்லூரிகளில் மட்டும் இதுவரை 80 பேருக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இது கடந்த வருடம் மொத்த ஐஐடி எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

கடந்த வருடம் கொரோனா காரணமாக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்த நிலையில், இந்த வருடம் அதிகப்படியான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளது. இதனால் ஐஐடி மாணவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

 6 ஐஐடி கல்லூரி

6 ஐஐடி கல்லூரி

இந்த வருடம் ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கவுகாத்தி, ஐஐடி கான்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி காரக்பூர், ஐஐடி வாரனாசி ஆகிய 6 கல்லூரியில் மொத்தம் 220 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இது கடந்த வருட எண்ணிக்கையை விடவும் பல மடங்கு அதிகம் எனத் தெரிகிறது.

 ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸ்

குறிப்பாக ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை கடந்த வருடத்தைக் காட்டிலும் 181 சதவீதம் அதிகரித்து 16ல் இருந்து 45ஆக உயர்ந்துள்ளது. ஐஐடி கவுகாத்தி-யில் இதன் எண்ணிக்கை வெறும் 6ல் இருந்து 28 ஆக உயர்ந்து 366 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 வேலைவாய்ப்பு எண்ணிக்கை

வேலைவாய்ப்பு எண்ணிக்கை

ஐஐடி மெட்ராஸ் 1,208 பேருக்கும், ஐஐடி கவுகாத்தி-யில் 625க்கும் அதிகமானோருக்கும், ஐஐடி கான்பூர்-ல் 940 பேருக்கும், ஐஐடி ரூர்க்கி 1000க்கும் அதிகமானோருக்கும், ஐஐடி காரக்பூர் 1300 பேருக்கும், ஐஐடி வாரனாசி-யில் 1142 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இது பெரும்பாலான கல்லூரியின் 4 நாள் தரவுகள் மட்டுமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+