தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெறக்கூடிய பரப்புரையாக தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரை இடம் பெற்றிருக்கிறது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக அரசியல்வாதியாக மாறி இருக்கக்கூடிய விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களம் காண்கிறது. இந்த தேர்தலில் விஜயும் நேரடியாக போட்டியிடுகிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ரோடு ஷோ, பிரச்சார பொது கூட்டம் என அவர் செல்லும் இடம் எங்கும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவர் பேச்சை கேட்கின்றனர். அது மட்டுமில்லாமல் ரசிகர்களும் தொண்டர்களும் வழி நெடுங்கிலும் விஜயின் வாகனத்தையே பின் தொடர்வதையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தினம்தோறும் விஜய் தேர்தல் பரப்புரை தொடர்பான தகவல்கள் தான் பரபரப்பாக பேசப்படக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது. விஜய் தேர்தல் தேர்தல் பரப்புரைகளின் போது எல்லாம் அவருக்கு பாதுகாப்பாக பவுன்சர்கள் வருகிறார்கள். அவர் நடந்து செல்லும் போதும், அவர் வாகனத்தின் மீது ஏறி பேசும் போதும் அவருக்கு பாதுகாப்பாக இவர்கள் திகழ்கிறார்கள்.

இவ்வாறு விஜய் உடன் வரும் பவுன்சர்கள் எப்போதுமே கையில் ஒரு கருப்பு நிற சூட்கேஸ் போன்ற ஒரு பொருளை வைத்திருக்கிறார்கள். இது என்ன என்பதுதான் சமூக வலைதளங்கள் என்றும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. இது பார்ப்பதற்கு ஒரு லேப்டாப் பேக் போல தெரியும், ஆனால் இது பையும் இல்லை, சூட்கேசும் இல்லை. ஆனாலும் விஜய்க்கு பாதுகாப்பாக செல்லக்கூடிய பவுன்சர்கள் எங்கு சென்றாலும் கைகளில் இதனை கொண்டு போகிறார்கள். இது ஒரு புல்லட் ஃப்ரூஃப் பேக் (bullet proof bag).
அசாதாரணமான சூழல்களில் உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு கேடயமாக இந்த பை செயல்படும். இதனை Ballistic Shield Bag என அழைக்கிறார்கள். திடீரென தாக்குதல் நடத்தப்படுகிறது அல்லது ஏதேனும் பொருட்கள் வீசப்படுகிறது, துப்பாக்கி சூடு போன்ற ஏதேனும் அசம்பாவிதம் ஏறுகிறது எனும்போது இதில் இருக்கக்கூடிய ஒரு பட்டனை அழுத்தினால் போதும் இது சட்டென விரிந்து ஒரு கேடயமாக மாறிவிடும்.
இதற்குள் இருக்கக்கூடிய சின்தடிக் பைபர் இழைகள் இரும்பை விட 5 மடங்கு வலிமையானதாக சொல்லப்படுகிறது. பல்வேறு பிரபலங்களும் இந்த நவீன புல்லட் ப்ரூப் பைகளை எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்கிறார்கள். துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து கூட இது பாதுகாக்கும். விஜய்யின் பாதுகாப்புக்காக இது பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஏராளமான பிரபலங்கள் பொது இடங்களில் குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் இந்த வகை நவீன கேடயத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் தரம் மற்றும் பிராண்டுக்கு ஏற்ப பல லட்சங்களில் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications