இந்தியாவின் ரீடைல் சந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவில் கடந்த 5 வருடத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது, அதிலும் குறிப்பாக வெளிநாட்டு ரீடைல் பிராண்டுகள், இந்தியாவின் பெரிய ரீடைல் பிராண்டுகள் என அனைத்தும் ஆன்லைன், ஆப்லைன் வாயிலாக பெரும் நகரங்களை தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களையும் அடைந்துள்ளது.
இந்த பிரம்மாண்டா வளர்ச்சி பல வெளிநாட்டு பிராண்டுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது, இதன் எதிரொலியாக தான் லூலூ மால் முதல் தற்போது ஐகியா வரையில் பல வெளிநாட்டு பிராண்டுகளில் இந்தியாவில் தனது கட்டமைப்பை விரிவாக்கம் செய்து வருகிறது.

ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஐகியா இந்தியாவுடனும், இந்திய சப்ளையர்களுடன் சுமார் 40 வருடங்களாக பணியாற்றியும், வர்த்தகம் செய்தும் வந்தாலும் கடந்த 5 வருடத்தில் தான் ரீடைல் கடைகளை திறந்து வருகிறது.
ஐகியா பிராண்ட இந்தியாவில் தனது ரீடைல் வர்த்தகத்திற்காக இதுவரையில் 10,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டில் ஹைதராபாத், நவி மும்பை, வோர்லி சிட்டி, பெங்களூர், ஆர் சிட்டி என 5 கடைகளை திறந்துள்ளது.
இந்த நிலையில் ஐகியா தற்போது அடுத்த டார்கெட்-ஐ டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு திருப்பியுள்ளது, இதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் டெல்லி, நொய்டா, குரூகிராம் ஆகிய பகுதிகளில் தனது ரீடைல் ஸ்டோர்களை திறக்க உள்ளது.
இதை தொடர்ந்து ஐகியா தனது அடுத்த வர்த்தக டார்கெட் பகுதியாக சென்னை மற்றும் புனே ஆகியவற்றை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள் சென்னையில் பிரம்மாண்ட ஐகியா கடை திறக்கப்பட உள்ளது, சொல்லப்போனால் ஐகியா நிர்வாகம் இப்போதே இதற்கான இடத்தை தேட துவங்கியிருக்கும்.
சென்னையில் ஏற்கனவே லூலூ மால் திறக்கப்பட உள்ள வேளையில் தற்போது ஐகியா வருகிறது. மார்ச் 31, 2022 உடன் முடிவடைந்த நிதியாண்டில் ஐகியா நிறுவனம் சுமார் 77.07 சதவீத விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications