வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மிகவும் விருப்பமான முதலீட்டு தளமாக இருக்கும் வேளையில், தற்போது ஸ்வீடன் நாட்டின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை அறிவிக்க தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கான ஸ்வீடன் நாட்டு தூதரான ஜான் தெஸ்லெஃப் புதன்கிழமை 15 பேர் உடன் தொழிற்துறை அமைச்சரை சந்தித்தார். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் தெஸ்லெஃப் தமிழ்நாட்டில் ஐகியா, டிரெல்லெபோர்க் மரைன் சர்வீசஸ் (Trelleborg Marine Services), சேப் (SAAB) மற்றும் கேம்ஃபில் (Camfil) உள்ளிட்ட நான்கு முக்கிய ஸ்வீடன் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தளத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதில் ஐகியா கடைகள் பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் திறக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாட்டில் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு இந்த சந்திப்பு விடையாக மாறியுள்ளது. அமைச்சர் டிஆர்பி ராஜா உடனான சந்திப்பு மூலம் விரைவில் ஐகியா சென்னை புறநகர் பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது, 70 ஸ்வீடின் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றது, இந்த நிறுவனத்தில் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஸ்வீடன் அரசு தமிழ்நாடு உடனான பொருளாதார கூட்டணியை கூடுதலாக வலுப்படுத்த, கூடுதல் முதலீடுகளை செய்யும் நோக்கம் கொண்டுள்ளது என ஜான் தெஸ்லெஃப் தெரிவித்தார்.
புதிதாக 4 ஸ்வீடன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை தாண்டி, சென்னையில் உள்ள ஸ்காண்டினேவியன் ரோபாட்டிக் சிஸ்டம்ஸ் மற்றும் கோவைவில் உள்ள ஜாகோபி ஆகிய நிறுவனங்கள் தங்கள் புதிய தொழிற்சாலைகளை 2025 ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் திறக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த விரிவாக்கங்களும், திட்டமிடப்பட்டு வரும் புதிய முதலீடுகளும் ஸ்வீடன் நாட்டின் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் வணிக சூழல் மற்றும் உற்பத்தி மையமாக அதன் திறன் மீது வைத்திருக்கும் தீவிரமான நம்பிக்கையை காட்டுகிறது. இதேபாதையில் தான் தற்போது சீனாவில் இருக்கும் தைவான் நிறுவனங்களும் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் படையெடுக்க துவங்கியுள்ளது.
இந்தியாவுக்கான ஸ்வீடன் நாட்டு தூதரான ஜான் தெஸ்லெஃப் தெஸ்லெஃப் தலைமையிலான 15 பேர் கொண்ட ஸ்வீடிஷ் வர்த்தக துறையை சேர்ந்த முக்கிய குழு தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பொருட்டு, அவர்களுடைய திட்டத்தையும்ஸ ஆர்வத்தையும் சென்னையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களை நேரில் சந்தித்து விளக்கினர்.
ஸ்வீடின் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை இந்தியாவுக்கான உள்நாட்டு வர்த்தகத்தை பூர்த்தி செய்யும் சந்தையாக பார்க்காமல், ஏற்றுமதிக்கான முக்கிய இடமாகவும் தமிழ்நாட்டை நம்புகிறது. இதன் வெளிப்பாடே அடுத்தடுத்த முதலீடுகளுக்கான பேச்சுவார்த்தை.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications