இந்தியாவில் ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேவையை உணர்ந்துள்ள IKEA நிறுவனத்தின், Ingka Centres கூடிய விரைவில் நொய்டாவில் லைக்லி (Lykli) என்ற பெயரில் மிகப்பெரிய மால் ஒன்றை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது.
டெல்லிக்கு அருகே நொய்டாவில் 5500 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த மீட்டிங் பிளேஸை நிறுவ இருப்பதாக Ingka Centres அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Ingka குழுமம் IKEA என்ற பெயரில் விற்பனை நிலையங்களையும், Ingka Centres என்ற பெயரில் மால்களையும் நடத்தி வருகிறது.

ஏற்கனவே குருகிராம் பகுதியில் Ingka Centre அமைக்கப்படும் என இந்த குழுமம் அறிவித்தது. 2025ஆம் ஆண்டுக்குள் இது பயன்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளது. இதற்காக இந்த குழுமம் 3,500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் தங்களுடைய இரண்டாவது மால் நொய்டாவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. லைக்லி என்ற பெயரில் இந்த மால் செயல்படும் என கூறியுள்ளது. 5500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த மையத்தின் மூலம் சுமார் 9,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
நொய்டா பகுதியில் அமையும் இந்த இடம் சில்லறை விற்பனையகம், உணவகம், தங்குமிடங்கள், பணி செய்யும் இடங்கள், பொழுதுபோக்குக்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் கொண்ட மையமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த மையத்திற்கு 25 மில்லியன் பேர் வருகை தருவார்கள் என கணிப்பதாக இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2028 ஆம் ஆண்டுக்குள் இந்த மையமானது பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
இதன்படி 47,833 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மால் கட்டமைக்கப்படும் என்றும் IKEA நிறுவனத்தின் மிகப்பெரிய திட்டப்பணியாக இது இருக்கும் என்றும் தெரிகிறது. நொய்டாவின் அடையாளமாக இது உருவாகும் என IKEA நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஷாப்பிங் சென்டர் பிரிவில் இந்த நிறுவனம் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. கிட்டத்தட்ட 3000 பிராண்டுகள் இந்த மையத்தின் கீழ் தங்களது பொருட்களை விற்பனை செய்கின்றன. 13 இடங்களில் 35 மால்களை இது நிறுவியுள்ளது. IKEA முதன்முறையாக 2018 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியது. தற்போது மும்பை , புனே, குஜராத், பெங்களூர் உள்ளிட்ட 62 இடங்களில் இந்த நிறுவனம் விற்பனை நிலையங்களை வைத்திருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications