சென்னை: சர்வதேச அளவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய தனியார் சில்லறை விற்பனை நிறுவனமான IKEA அடுத்த கட்டமாக சென்னை நகரில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கூடிய விரைவில் சென்னையில் IKEA ஸ்டோர் திறக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.
ஸ்வீடனை தலைமை இடமாகக் கொண்ட IKEA நிறுவனம் மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் ஆகவும் இந்த நிறுவனம் இருக்கிறது. கிட்டத்தட்ட 81 ஆண்டுகளாக இந்த நிறுவனம் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டில் முதன்முறையாக IKEA நிறுவனம் தன்னுடைய கடையை திறந்தது.

தற்போது பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் இந்த நிறுவனம் கடைகளை நிறுவி இருக்கிறது. குரு கிராம் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய மால்களை திறக்க இருப்பதாக 2021 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இனி இந்தியாவில் தங்களுடைய கவனத்தை சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களை நோக்கி திருப்பி இருப்பதாக IKEA நிறுவனம் தெரிவித்துள்ளது.
IKEA இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படும் சுசன்னே புலுவேரர் இந்தியாவில் தற்போது தர நிர்ணய கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் அந்த சவால்களுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வந்து சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் கவனம் செலுத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்கள் நல்ல வளர்ச்சி அடையக்கூடிய நகரங்களாக இருக்கின்றன என்றும் அவர் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய மரச்சாமான்களுக்கு பல்வேறு தர கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்ய இருக்கிறது. கூடிய விரைவில் அது தொடர்பான அறிவிப்பினை எதிர்பார்க்கலாம். இது நடைமுறைக்கு வரும்போது தங்கள் நிறுவனம் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ள சூசன்னே இந்த சவால்களை எல்லாம் மீறி தங்கள் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசின் தர நிர்ணயத்தை எட்டாத எந்த ஒரு பொருளையும் நாங்கள் இந்தியாவிற்கு கொண்டு வர மாட்டோம் விற்பனை செய்ய மாட்டோம் என உறுதி கூறியுள்ள அவர் 2021 ஆம் ஆண்டு பொம்மைகள் இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பாக அரசு பல்வேறு தர நிர்ணயங்களை கொண்டு வந்தது. அப்போதும் நாங்கள் சில சவால்களை சந்தித்தோம் ஆனால் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது IKEA நிறுவனம் 7,000க்கும் அதிகமான தயாரிப்புகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ள அவர் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, குஜராத் , கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஈ காமர்ஸ் வாயிலாகவும் தங்களுடைய மரச் சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications