இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தன்னுடைய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைகளால் தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது . டாடா குழுமத்துக்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட ஐடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் ஊழியர்களின் இரண்டு சதவீதம் பேர் அதாவது 12 ஆயிரம் பேரை இந்த நிதியாண்டுக்குள் வேலையில் இருந்து நீக்க இருப்பதாக டிசிஎஸ் அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது, ஊழியர்களை மிரட்டுகிறது என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஊழியர்கள் அவமானப்படுத்தப்படுவதாகவும் தவறாக நடத்தப்படுகின்றனர் என்றும் ஐடி ஊழியர்களுக்கான சங்கமும் புகார் அளித்த வண்ணம் இருக்கிறது.

இத்தகைய சூழலில் தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலை குழுவின் உறுப்பினராக இருக்கக்கூடிய எம்பி ராஜா ராம் சிங் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கேட்டு இருக்கிறார். டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்க வேண்டிய பெயரில் முறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு இருக்கும் அவர் , அரசு இந்த விவகாரத்தில் கட்டாயம் தலையிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அக்டோபர் ஒன்றாம் தேதி மத்திய தொழில்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருக்கும் அவர், டிசிஎஸ் 12 ஆயிரம் ஊழியர்களை வேலையில் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது ஆனால் உண்மையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஊழியர்களின் நலனை பின்னுக்கு தள்ளிவிட்டு லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனங்கள் செயல்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கும் அவர் சமகாலத்திற்கான திறன்கள் இல்லாத ஊழியர்களே பணிநீக்கம் செய்வதாக நிறுவனங்கள் பணி நீக்கத்தை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறார்.
2024 -25ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனமே தங்கள் ஊழியர்களில் 91% பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனங்கள் எப்படி செயல்பட முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் அரசு ஏன் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது என வினவியுள்ளார்.
பெரிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தால் அரசுக்கு முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது ஆனால் எந்த ஒரு ஐடி நிறுவனமும் இதனை பின்பற்றவில்லை என சாடி இருக்கும் அவர் 2024ஆம் ஆண்டில் மட்டும் 1.5 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். ஐடி ஊழியர்களுக்கான சங்கமும் எம்பி ராஜா ராம் சிங்கின் இந்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications