கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் இன்போசிஸ் நாராயண மூர்த்தி-யை வறுத்தெடுக்கும் பதிவுகள் தான். நட்டின் வளர்ச்சிக்கு இந்திய ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என்ற கருத்துக்கு பெரும்பாலானவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

எந்த நாட்டிலும் எந்த தேசிய சட்டத்தின் கீழும் 70 மணி நேர வேலை என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் வளர்ந்த நாடுகள் அனைத்தும் தற்போது வாரத்திற்கு 48 மணி நேர வேலை நடைமுறைக்கு பதிலாக 40 மணி நேர வேலை என்ற கட்டமைப்பிற்குள் நுழைய ILO பரிந்துரை செய்கிறது என நாராயண மூர்த்தியின் 70 மணிநேர பேச்சுக்கு மத்தியில் குட்டு வைத்துள்ளது.
ILO வின் ஆய்வுகள் படி, நீண்ட பணி நேரங்கள் மூலம் அதிக உற்பத்தித் திறனைக் கொடுக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. உண்மையில், தினசரி அடிப்படையில் அதிக நேரம் வேலை செய்வது, அதிக சோர்வு காரணமாக மணிநேரத்தில் உற்பத்தித் திறனைக் குறையும். இது நேரடியாக நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.
மேலும் நீண்ட மணிநேரம் மற்றும் / அல்லது அதிக பணிச்சுமை உள்ள தொழிலாளர்கள் வேலையில் திருப்தி இருக்காது. இதனால் ஊழியர்கள் மத்தியில் உந்துதல் இருக்காது, அதிகளவில் விடுமுறை எடுக்க நேரிடும் என ILO அமைப்பின் சம்பள நிபுணர் அனூப் சத்பதி தெரிவித்தார். இதை 2018 இன் ILO அறிக்கையில் விளக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1921ல் தனியார் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை நிறுவனங்களில் ஒரு ஊழியர் தினமும் 8 மணிநேரம் பணி என வாரத்தில் அதிகப்படியாக 48 மணிநேர பணி திட்டத்தை அறிமுகம் செய்த போது முதலாவதாக இந்தியா இதை ஏற்றுக்கொண்டு மாற்றம் செய்தது. இதன் பின்பு பல நாடுகளும் இந்த முறையில் நடைமுறைப்படுத்தியது என ILO அமைப்பின் சம்பள நிபுணர் அனூப் சத்பதி தெரிவித்துள்ளார்.
இதே சர்வதேச தொழிலாளர் அமைப்பு தான் தற்போது வாரத்திற்கு 40 மணிநேர பணி கட்டமைப்பை தனது சமீபத்தில் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த 40 மணிநேரத்தை பல வகையில் பல நாடுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பித்தக்கது
இது இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் பணிநேரம் நீட்டிக்கப்பட்டு வாரத்திற்கு 4 நாள் மட்டுமே வேலை என்ற நிலையை கொண்டு வந்தது. இது பணியிலும் சரி, வாழ்க்கையிலும் சரி சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியது என ஆய்வுகள் கூறுகிறது.
இந்த முறை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் பல அமைப்புகள் வலியுறுத்திய நிலையில் இதே கார்பரேட் சமூகம் மறுப்பு தெரிவித்தது. சொல்லப்போனால் இந்தியாவில் இந்த முறையை நடைமுறையில் கொண்டு வந்து ஆய்வு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவு. டாப் 200 நிறுவனங்களில் ஒரு நிறுவனங்கள் இதை விவாதத்திற்கு கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1921 ஆம் ஆண்டு ILO Convention 1 வெளியிட்டுக்கு முன்பு பெரும்பாலான நாடுகள் வாரத்திற்கு 60 மணிநேர பணி கட்டமைப்பை கொண்டு இருந்தது. மேலும் அனூப் சத்பதி கூறுகையில் தற்போது ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் சில, மூன்று ஆசிய நாடுகள்-ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கொரியா உட்பட 15 நாடுகள் ILO அமைப்பின் 1935 ஆம் ஆண்டு பரிந்துரையான 40 மணி நேர பணிநேரத்தை அங்கீகரித்துள்ளது.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி பேச்சுக்கு பின்பு கடந்த ஒரு வாரத்தில் அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்ட பின்பு சாமானிய ஊழியர்கள் செய்ய வேண்டியது இதுதான் நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்திற்காக வெறும் 40 மணி நேரம் மட்டும் உழையுங்கள் போதும்.

மீதிமுள்ள 30 மணி நேரம் உங்களுக்காக செலவிடுங்கள், இந்த 30 மணி நேரத்தை பர்சனல் டெவலப்மென்ட்-காக செலவிட்டு தனி திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் இது வேலை செய்யும் இடத்திலோ அல்லது சொந்தமாக தொழில் துவங்கும் வாய்ப்பை உருவாக்கும். இதன் பின்பு ஒரு முதலாளியாக நீங்கள் ஒரு நாளில் 24 மணிநேரமும் உழைக்கலாம் எந்த தவறும் இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications