தமிழ்நாடு அரசின் உலக சுற்றுலா உச்சி மாநாட்டில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக சுற்றுலா துறைக்கும், பொழுதுபோக்கு துறைக்கும் முக்கியதுவம் கொடுத்து வரும் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இன்று நடந்த உலகளாவிய மாநாட்டில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்று புர்ந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த உலக சுற்றுலா உச்சி மாநாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்று இமேஜிகா வேர்ல்டு என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இதன்படி தமிழ்நாட்டில் பெரிய அளவிலான amusement park அமைக்கப்பட உள்ளது.

இமேஜிகா நிறுவனம் இத்திட்டத்துக்கு 650 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் சுற்றுலா துறையை பெரிதும் வலுப்படுத்தும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் செய்யப்பட்ட பிரசென்டேஷனில் இமேஜிகா நிறுவனம் கோயம்புத்தூரில் தனது புதிய amusement park அமைக்கப்பட உள்ளது தெளிவாகியுள்ளது. சென்னையில் வொன்டர்லா இருக்கும் வேளையில் தமிழ்நாட்டின் அடுத்த முக்கிய நகரமாக இருக்கும் கோயம்புத்தூர்-ஐ இமேஜிகா நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தமிழ்நாடு உலக சுற்றுலா உச்சி மாநாட்டின் போது கையெழுத்தானது. மாநில அரசு சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இமேஜிகா போன்ற பெரிய நிறுவனத்தின் வருகை மாநிலத்துக்கு புதிய சுற்றுலா இடமாக உருவாக உதவும்.
இமேஜிகா (Imagicaa) இந்தியாவின் மிகப்பெரிய தீம் பார்க் - ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றாகும். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் Khopoli-ல் 130 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய தீம்பார்க் அமைந்துள்ளது. இமேஜிகா நிறுவனம் NSE மற்றும் BSE-யில் பட்டியலிடப்பட்டுள்ளது . இமேஜிகாவில் தீம் பார்க், வாட்டர் பார்க், ஸ்னோ பார்க் மற்றும் ஒரு ஹோட்டலும் உள்ளன.
2010இல் மன்மோகன் ஷெட்டியால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2022இல் மால்பானி குழுமத்தால் வாங்கப்பட்டது. தற்போது மால்பானி குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் தற்போது 7 தீம் பார்க்குகளை இயக்குகிறது. 2025இல் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2031ஆம் ஆண்டுக்குள் 14 தீம் பார்க்குகளாக விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா துறையில் முக்கியமான நிறுவனமாக மாறுவதை இலக்காக கொண்டு செயல்படுகிறது.
தற்போது இமேஜிகாவின் பங்கு விலை NSE-யில் ரூ.50.26ஆக உள்ளது (இன்று 0.69% சரிவு). இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2870 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications