இந்திய வானிலைத் துறை (IMD) பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது, கனமழை மற்றும் இடி மின்னல் கூடிய மழை வரும் என எச்சரிக்கை அளித்துள்ளது. பெங்களூர் நகர மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை மற்றும் வலுவான காற்றுக்கு இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது.
இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல் மற்றும் மழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது என எக்னாமிக் டைம்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

பெங்களூருக்கும், பெங்களூர் மக்களுக்கும் மழை புதியது இல்லை என்றாலும், மழையால் எற்படும் விளைவுகள் கடுமையான பாதிப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஏற்கனவே மோசமாக இருக்கும் பெங்களூர் டிராபிக், மழையாலும், சாலையில் தண்ணீர் தேங்குவதாலும் இன்னும் மோசமாகும். இதுமட்டும் அல்லாமல் பெங்களூரில் பல பகுதிகள் மழைநீர் தேங்கும் பிரச்சனை இருப்பதாலும், பல வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயமும் உள்ளது என்பது மற்றொரு முக்கியமான விஷயமாக உள்ளது.
IMD-வின் சமீபத்திய அறிக்கைப்படி, பெங்களூர் நகரம் மற்றும் இதை சுற்றியுள்ள கிராமப்புறங்கள், சிக்கபள்ளாப்பூர், கோலார், துமகூர், ராமானகரா ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் இடி உடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதியில் மழையுடன் சுமார் 30-40 கிமீ/மணி வேகத்தில் வலுவான காற்று வீசும் எனவும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மரங்கள் உடைந்து விழவும் வாய்ப்புள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது.
பள்ளாரி மற்றும் விஜயநகரா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கும் வலுவான காற்றுடன் சாத்தியம் உள்ளது. இந்த கணிப்பு, தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த அழுத்தம் மூலம் ஏற்படும் என்று IMD விளக்குகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications