சர்வதேச பொருளாதாரச் சந்தை நிலையற்ற தன்மையில் இருக்கும் நிலையில் அமெரிக்கா உட்படப் பல நாடுகள் அடுத்த 6-9 மாதத்தில் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கத்திய நாடுகளின் நெருக்கடி காரணமாகச் சீனாவை விட்ட சர்வதேச நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தளத்தை வேறு நாடுகளுக்கு மாற்றி வருகிறது. குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றி வருகிறது.
இப்படியிருக்கும் நிலையில் ஐஎம்எப் உயர் அதிகாரி சீனாவில் இருந்து வெளியேறுவது மூலம் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
சீனா ஆதிக்கம்
குளோபல் சப்ளை செயினில் சீனா மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் சீனாவின் உற்பத்தித் திறன் மற்றும் அளவு குறைந்தால் மிகப்பெரிய தாக்கத்தையும், செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணா ஸ்ரீநிவாசன்
ஐஎம்எப் அமைப்பின் ஆசிய மற்றும் பிசிபிக் பிரிவின் தலைவராக இருக்கும் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் கூறுகையில், எது எப்படி இருந்தாலும், கடைசியில் நாம் பார்க்க வேண்டியது லாபம் மற்றும் நஷ்டம் தான் இப்படியிருக்கையில் குளோபல் சப்ளை செயினில் சீனா மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது, இதில் சில நல்ல விஷயமும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
ஏன் பல அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு எடுத்து செல்கிறது..? இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் எனக் கேள்வி கேட்டதற்கு ஐஎம்எப் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
சீனா
சீனாவின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் ஆசிய நாடுகளுக்கான வர்த்தகம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கானது. இப்படியிருக்கையில் இதில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தைச் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் என்பதால் தீவிரமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜீரோ கோவிட் கொள்கை
இதேபோல் சீனா தற்போது ஜீரோ கோவிட் கொள்கையில் மாட்டிக்கொண்டு அந்நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் பொருட்களுக்கான பற்றாக்குறை, விலை உயர்வு போன்ற பிரச்சனைகள் உள்ளது. இதனால் சீனா விரைவில், அதே நேரத்தில் பாதுகாப்பாக ஜீரோ கோவிட் கொள்கையில் இருந்து வெளியேற வேண்டும்.


Click it and Unblock the Notifications