கோதுமை ஏற்றுமதி மீதான தடையை விரைவில் இந்தியா மறுபரிசீலனை செய்து நீக்கவோ அல்லது தளர்த்தவோ வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வலியுறுத்தியுள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதி நாடான ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கியுள்ள காரணத்தால் உலக நாடுகளில் கோதுமை தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் துருக்கி உட்படப் பல நாடுகள் இந்தியாவிடம் கோதுமை ஆர்டர் செய்தது.
ஏற்கனவே இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்த காரணத்தாலும், ஏற்றுமதி ஆர்டர்கள் குவிந்த காரணத்தாலும் இந்தியாவில் இதன் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.
கிறிஸ்டலினா ஜார்ஜீவா
சுவிஸ் நாட்டின் டாவோஸ்-ல் நடந்த உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தில் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இந்தியா கிட்டத்தட்ட 1.35 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க வேண்டும், இதேவேளையில் வெப்பத்தின் காரணமாக விவசாய உற்பத்தியைக் குறைத்துள்ளது என்பதும் புரிகிறது. ஆனாலும் நான் இந்தியாவைக் கூடிய விரைவில் கோதுமை ஏற்றுமதி தடை குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கிறிஸ்டலினா பேசினார்.
நெருக்கடி
ஏனென்றால் அதிகமான நாடுகள் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் போது, மற்ற நாடுகளும் விலைவாசியைக் குறைக்க இத்தகைய நடவடிக்கையை எடுக்கக் கூடும். அப்படிச் செய்தால் உலக நாடுகளில் உருவாகியுள்ள நெருக்கடிகள் சமாளிப்பது மிகவும் கடினமாகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
கோதுமை ஏற்றுமதி
மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்தாலும் வெளிநாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்திய அரசு வழங்கும் அனுமதியின் அடிப்படையில் மற்றும் அவர்களின் அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் கோதுமை ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனியார்களின் கோதுமை ஏற்றுமதி மட்டுமே பாதித்துள்ளது.
ஜி7 நாடு
ஜி7 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்யும் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர். "எல்லோரும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால் நெருக்கடியை மோசமாக்கும்" என்று ஜெர்மன் விவசாயத் துறை அமைச்சர் செம் ஓஸ்டெமிர் கூறியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications