உலகளவில் பொருளாதார மந்தநிலை உச்சத்தில் இருக்கும் நிலையில் விடிந்தால் என்ன நடக்கும் என்ற அச்சம் வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரையில் அதிகரித்துள்ளது. இதற்கு மத்தியில் OPEC அமைப்பு அறிவித்த கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு என்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது, அடுத்த மாதம் முதல் ஒரு நாளுக்கு 11.6 லட்சம் பேரல் உற்பத்தியை குறைக்க உள்ளதாக சவுதி அரேபியா முதல் பல OPEC நாடுகள் அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் என்பது பணவீக்கம் அதிகரிக்க முதலும் முக்கிய காரணமாக இருக்கும் வேளையில், மே மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் காரணத்தால் இதன் விலை உயர்வது மட்டும் அல்லாமல் எரிபொருள் தலையீடு இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் நுகர்வோர் சந்தையில் பணவீக்கம் அதிகரித்து மத்திய வங்கிகளுக்கு புதிய தலைவலியை உருவாக்க உள்ளது. இதன் காரணமாகவே வியாழக்கிழமை நடந்து முடிந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் பணவீக்க உயர்வின் அடிப்படையில் உயர்த்திக்கொள்ளலாம் என்ற திட்டத்துடன் ஆர்பிஐ முடிவெடுத்து.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் Kristalina Georgiva 2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீத பங்கீடு இந்தியா மற்றும் சீனா கையில் உள்ளது என பளிச்சென்று கூறியுள்ளார். இது மட்டும் அல்லாமல் சர்வதேச பொருளாதாரம் 3 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை மட்டுமே அடையும் எனவும் Kristalina Georgiva தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி அடையும் சந்தைகளை பார்க்கும் போது ஆசியா தான் மிகவும் பிரகாசமாக உள்ளது, அதிலும் முக்கியமாக இந்தியா மற்றும் சீனா 2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இதேவேளையில் மற்ற சந்தைகள் சரிவு பாதையில் உள்ளது.

கடந்த சில வருடமாக சர்வதேச பொருளாதாரம் கொரோனா தொற்று, ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் பாதித்து வருகிறது, இதில் முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக 6.1 சதவீதமாக இருந்த சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதியாக குறைந்து 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் வல்லரசு நாடுகள் மந்தமான பொருளாதார வளர்ச்சியை பாதிக்க உள்ளது, முக்கியமாக அமெரிக்கா பொருளதாரத்தை பாதிக்கும் காரணிகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. வட்டி விகித உயர்வில் துவங்கி பணவீக்கம், பணிநீக்கம், வேலைவாய்ப்பு, பிராந்திய வங்கிகளின் நிலையற்ற தன்மை என பல பிரச்சனைகள் அடுக்கடுக்காக உள்ளது.
இதேபோல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையும் ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் பெறும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது, இதனால் வல்லரசு நாடுகள் இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications