சர்வதேச நாணய நிதியம், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.1% இலிருந்து 5.9% ஆக குறைத்து தனது கணிப்பை வெளியிட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் வேளையில், கொரோனா தொற்று பாதிப்பு நீடித்து வருகிறது.
இதோடு உலகின் பல நாடுகள் இறுக்கமான நிதி நிலைமைகளை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் சர்வதேச பொருளாதாரத்திற்கு இந்த ஆண்டு மந்தமான வளர்ச்சியை பதிவு செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சி மீடியம் டேர்ம்-ல் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பல தசாப்தங்களில் மந்தமாக உள்ளதாக IMF அதன் World Economic Outlook அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி அளவீடு முன்பு கணிக்கப்பட்ட அளவான 2.9 சதவீதத்தில் இருந்து 2.8 சகவீதமாக குறைந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் 2022 ஆம் ஆண்டில் பதிவான 3.4 சதவீதத்தை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளின் வளர்ச்சிக்காக நிதியுதவி செய்யும் சர்வதேச நாணய நிதியம் ஜனவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் நிதியாண்டில் 6.1 சதவீதமும், 2025 ஆம் நிதியாண்டில் 6.8 சதவீதமாக வளரும் என முன்பு கணித்திருந்தது. ஆனால் இப்போது 2025 ஆம் நிதியாண்டில் 6.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி அளவீடுகள் குறைக்கப்பட்டாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் எனவும் ஐஎம்எப் கணித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் 4.9% ஆகவும், அடுத்த நிதியாண்டில் 4.4% ஆகவும் குறையும் என்று IMF கணித்துள்ளது.
கடந்த வாரம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை 2024 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.3% மற்றும் 6.4% ஆக குறைத்துள்ளன. இந்த நிலையில் 3வது சர்வதேச அமைப்பாக சர்வதேச நாணய நிதியம் 5.9 சதவீதமாக குறைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications