மும்பை: இந்திய பொருளாதாரம் குறித்தான பல அறிக்கைகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அவற்றில் பல இந்திய பொருளாதாரத்திற்கு எதிரானதாகவே உள்ளன. அதிலும் சில அறிக்கைகள் நம்மை பயமுறுத்தும் விதமாகவே உள்ளன.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பிட்டில் தற்போது கணிசமான அளவை குறைத்துள்ளது.
இது குறித்து இந்தியா வம்சாவளியைத் சேர்ந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இதனை தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு பரிசீலனை
வாஷுங்டனை தளமாகக் கொண்ட IMF அமைப்பு, கடந்த அக்டோபரில் ஒரு மதிப்பீட்டை கொண்டுள்ளது. இது அடுத்த ஜனவரியிலும் இதை மறுபரிசீலனை செய்யும் என்றும் டைம்ஸ் நெட்வொர்க் ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கீதா கூறியுள்ளார். மேலும் இந்த மறுபரிசீலனையில் இந்தியா கீழ் நோக்கித் தள்ளப்படலாம் என்றும் சூசகமாக பதில் கூறியுள்ளார்.
வீழ்ச்சிக்கு காரணம்
பொருளாதார வீழ்ச்சிக்கு நுகர்வு வீழ்ச்சி, தனியார் முதலீடுகள் பற்றாக்குறை மற்றும் மந்தமான ஏற்றுமதிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன. அதிலும் ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமும், இதே செப்டம்பர் காலத்தில் 4.5 சதவிகிதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர் கணிப்புகள்
ரிசர்வ் வங்கி மற்றும் பிற பார்வையாளர்கள் இந்தியாவுக்கான வளர்ச்சி கணிப்புகளை கீழ் நோக்கி மதிப்பாய்வு செய்துள்ளனர். இவ்வாறாக அனைவரும் இந்தியாவின் பொரூளாதார கணிப்பை அனைத்து தரப்பினரும் வீழ்ச்சி காணும் என்றே மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா குறித்து வரும் தரவுகளைப் பார்த்தால், ஜனவரியில் எங்கள் தரவுகளை மீண்டும் திருத்திக் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது என்றும் கீதா தெரிவித்துள்ளார்.
திருத்தம் எதிர்மாறாக இருக்கும்
ஆக இந்த திருத்தம் நிச்சயம் இந்தியாவுக்கு கணிசமான அளவில் கீழ் நோக்கிய திருத்தமாகக் இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த எண்ணை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்ட நிலையில், அது 5 சதவிகிதத்திற்கும் கீழாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் கடந்த அக்டோபர் மாத கணிப்பின் படி 2019ம் ஆண்டில் இந்தியாவுக்கு 6.1 சதவிகித வளர்ச்சியைக் கணித்துள்ளது. அதேபோல் 2020ல் 7 சதவிகிதமாக உயரும் என்றும் கூறப்படுகிறது.
இலக்கை அடைவது சாத்தியமா?
2025ம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடையும் சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்றும் கூறியுள்ளார். 38 வயதான பொருளாதார நிபுணர் ஒருவர், இலக்கை அடைய இந்தியா பெயரளவில் 10.5 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும். இதே கடந்த ஆறு ஆண்டுகளில் 8 - 9 சதவிகிதமாகவும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதி நிலைமை சவாலானது
இந்தியாவின் நிதி நிலைமை மிக சவாலானது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 3.4 சதவிகிதத்தை மீறும் என்றும் எச்சரித்துள்ளார். அதிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசானது கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்தது. ஆனால் இதே நேரம் வருவாயை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால் பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நிதித்துறையில் பிரச்சனைகள் உள்ளன
குறிப்பாக இந்தியாவின் பிரச்சனைகள் நிதித்துறையில் உள்ளன. டட் சொத்துகளின் தீர்மானங்களின் தாமதங்கள் மற்றும் வழக்குககளை கையாள்வதில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்களில் திறன் இல்லாமை ஆகியவற்றை குறிப்பிட்டும், மேலும் இதனை கொள்கை வகுப்பாளர்கள் இதை விரைவில் தீர்க்க வேண்டும். கீதா கூறியுள்ளார்.
வருவாய் வளர்ச்சிக்கு தீர்வு காணப்பட வேண்டும்
கிராமப்புற வருமான வளர்ச்சியின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மேலும் பண்னை உற்பத்தியாளர்களின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவின் உற்பத்தி திறனானது உலகளாவிய உற்பத்தி திறனுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவே. ஆக விவசாயத் துறையில் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
யார் மோசமான நிலையில் உள்ளனர்
பொருளாதார நிலையை பொறுத்தவரை யார் மோசமானவர், இந்தியாவா சீனாவா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ள கீதா, இரு வேறு நாடுகளும் வேறுபட்ட கொள்கைகளை கொண்டுள்ளன. ஆக இதில் ஒப்பீடு செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.எப்படியோங்க.. இந்திய பொரூளாதாரம் இன்னும் வீழ்ச்சியில் தான் இருக்கிறது. அதனை தவிர்க்க இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இங்கு அனைவரின் வாதமாக உள்ளது. இதே நிலையில் பொருளாதாரம் சென்றால் பிரதமர் மோடியின் $5 டிரில்லியன் கனவு கனவாகவே போய்விடுமோ என்ற கவலையிலும் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications