சென்னை: சர்வதேச நாணய நிதியம் (IMF) புதன்கிழமை வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி கணிப்பில் வியக்க வைக்கும் வகையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆசிய நாடுகளின் ஆதிக்கம் தான்.
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் எப்போதும் மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வேளையில், மார்ச் 6 ஆம் தேதி வெளியான ஐபிஎன் கணிப்பு மொத்த கதையும் மாற்றியுள்ளது.

ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கும் என்று கணித்துள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து சீனா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் பெரும் பங்கீட்டைக் கொண்டு இருக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் எந்த அளவு என்பதில் தான் அதிர்ச்சி.
இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நான்கு நாடுகள் அடுத்த 5 வருடத்தில் பதிவாகும் உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்தில் பாதிக்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கும் என்று ஐஎம்எப் எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2023ல் செப்டம்பர் மாதம் ஐஎம்எப் அமைப்பு செய்த இதேபோன்ற கணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் அதிக ஜிடிபி கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா விரைவில் 3வது இடத்தை அடையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணிப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பிற நிறுவனங்கள் செய்த சமீபத்திய கணிப்புகளுடன் ஒத்துப்போகிறது. இந்த கணிப்புகள் அனைத்தும் இந்தியப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைக் காணும் என்பதைத் தொடர்ந்து உறுதி செய்கிறது.
இந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது உள்நாட்டுக் கடன் வரம்பு அதிகரிப்பு, உள்கட்டமைப்பு செலவுகளில் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் குறைவது ஆகியவை இருக்கும் என்று கூறப்பட்டாலும் ரூபாய் மதிப்பு, வர்த்தக பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் எண்ணிக்கை ஆகியவை தொடர்ந்து இந்தியாவுக்குப் பிரச்சனையாக இருப்பதை மறந்துவிடக்கூடாது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications