சர்வதேச பொருளாதார மந்த நிலை குறித்துப் பல அமைப்புகள் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் ஐஎம்எப் எச்சரிக்கை பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மந்த நிலைக்குள் சென்றுவிடும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் 2008ல் ஏற்பட்ட சர்வதேச நிதியியல் நெருக்கடியை விடவும், 2020 கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட ரெசிஷனை விடவும் இந்த ரெசிஷன் மோசமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐஎம்எப் இந்த ரெசிஷன் சர்வதேச பொருளாதாரத்தில் எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) மீண்டும் ஒரு முறை 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் குறைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் 2026 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச பொருளாதாரத்தின் மதிப்பு 4 டிரில்லியன் டாலர் வரையில் குறைத்துள்ளது.
சர்வதேச பொருளாதார வளர்ச்சி
ஐஎம்எப் அமைப்பு ஏற்கனவே 3 முறை சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் குறைத்துள்ள நிலையில், தற்போது 4வது முறையாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் 3.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என்றும், 2023 ஆம் ஆண்டில் 2.9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என்றும் கணித்துள்ளது.
கிறிஸ்டலினா ஜார்ஜீவா
இதுகுறித்து ஐஎம்எப் அமைப்பின் நிர்வாகத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேசும் போது பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் மோசமான நிலையை அடைய உள்ளது. ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு IMF-ன் உலகப் பொருளாதாரம் மீதான கண்ணோட்டம் மொத்தமாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ரெசிஷன் ஆபத்து
ரெசிஷன் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் உலகில் 3ல் ஒரு 1 பகுதி நாடுகள் வருடத்தில் 2 காலாண்டுகள் தொடர்ந்து பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும் என ஐஎம்எப் அமைப்பின் நிர்வாகத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications