இந்தியாவின் வளர்ச்சி இம்புட்டு தான்.. புட்டு புட்டு வைத்த ஐஎம்எஃப்.. இன்னும் என்ன நடக்க போகிறதோ!

கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவுக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு எந்த பக்கம் எடுத்தாலும் அடி வாங்கிக் கொண்டே இருந்தது மத்திய அரசு.

ஒரு புறம் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, உற்பத்தி துறை சரிவு, பணி நீக்கம், நாட்டில் அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த ஆட்டோமொபைல் துறை படு வீழ்ச்சி என ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறது.

அந்த பிரச்சனைகள் 2019-வுடன் முடிவடைந்ததா என்றால் இல்லை. இன்னும் தொடரும் நிகழ்வாகவே உள்ளது. ஏற்கனவே படு வீழ்ச்சி என எச்சரித்து வரும் நிபுணர்கள், தற்போது மீண்டும் தங்களது வளர்ச்சி விகிதங்களை குறைத்து வருகின்றனர்.

வளர்ச்சி விகிதத்தை குறைத்த ஐஎம்எஃப்

வளர்ச்சி விகிதத்தை குறைத்த ஐஎம்எஃப்

இதனை நிரூபிக்கும் விதமாக சர்வதேச நாணய நிதியம் முன்னர் நிர்ணயித்த இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% -லிருந்து தற்போது தனது மதிப்பீட்டை தடாலடியாக 4.8% குறைத்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முந்தைய கணிப்பை கடந்த அக்டோபரில் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதை மேலும் 1.3% குறைத்திருப்பது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

நுகர்வோர் தேவையில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சி, வங்கி அல்லா நிதி நிறுவனங்களில் நிலவி வரும் அழுத்தம் மற்றும் மோசமான கடன் வளர்ச்சி தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி அதிகரிக்கலாம் என்றும், நாணயம் மற்றும் நிதி தூண்டுதலின் உதவியுடன் எண்ணெய் விலைகள் குறையலாம் என்றும் எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளது.

உலகளாவிய வளர்ச்சி

உலகளாவிய வளர்ச்சி

இந்தியாவில் தான் வளர்ச்சி வீழ்ச்சி காணும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது எனில், சர்வதேச அளவிலும் வளர்ச்சி விகிதத்தையும் குறைத்துள்ளது. கடந்த அக்டோபரில் 2019ம் ஆண்டில் 2.9%மும், 2020ல் 3.3%மும், 2021ல் 3.4% கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2019, 2020ல் 0.1%மும், 2021ல் 0.2% குறைத்துள்ளது மேலும் கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

சர்வதேச வீழ்ச்சிக்கு காரணம்

சர்வதேச வீழ்ச்சிக்கு காரணம்

இவ்வாறு உலக பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே என்றும் கூறியுள்ளது, குறிப்பாக இந்தியா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையும் தான் காரணம் என்றும் விளக்கமளித்துள்ளது.

ஆசிய வளர்ச்சியிலும் வீழ்ச்சி

ஆசிய வளர்ச்சியிலும் வீழ்ச்சி

இந்திய பொருளாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது, ஆசிய பொருளாதாரத்திலும், ஏன் சர்வதேச அளவிலும் கூட எதிரொலித்துள்ளது. கடந்த அக்டோபரில் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 2019ல் 5.6%, 2020ல் 5.8%, 2021ல் 5.9% கணித்திருந்தது. ஆனால் தற்போது 2019ல் 0.2% குறைத்தும், இதே 2020ல் 0.3% குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகள்

பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகள்

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் புவி சார் பதற்றங்கள், குறிப்பாக அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை, இது உலக பொருளாதாரத்திற்கே தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகளவு வர்த்தக கட்டணத்தினால் உள்ள பிரச்சனைகளினால் ஏற்படும் சரிவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் உலகப் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைய வழி வகுக்கும் என்றும் ஐஎம் எஃப் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+