இந்திய பொருளாதாரம் முன்பை விட மோசமா இருக்கு.. உடனடியா நடவடிக்கை எடுங்க.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நிலவி வரும் மோசமான மந்த நிலைக்கு மத்தியில், ஏற்கனவே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. ஏற்கனவே இதைப் பற்றி பல முறை அலசி ஆராய்ந்து, தேவையான அளவுக்கு உள்ளூர் மீடியாவில் இருந்து, சர்வதேச நாணய நிதியம் வரையில் பலமுறை எழுதி விட்டன.

 

இந்த நிலையில் இன்று சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழல் முன்பை விட மிக பலவீனமாக உள்ளது. இதனால் அவசர சீர்திருத்தங்கள் தேவை என தெரிவித்துள்ளது. அதிலும் உடனடியான நிதித் சீர்திருத்தங்கள் தேவை என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் முன்பை விட மோசமா இருக்கு.. உடனடியா நடவடிக்கை எடுங்க.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ், ஐஎம்எஃப் முன்னர் கணித்ததை விட இந்தியாவின் பொருளாதார சூழல் மிக பலவீனமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அதிலும் அதிகரித்து வரும் கடன் அளவுகள் மத்தியில் இந்தியாவுக்கு அவசரமாக, விரைவில் அதிக லட்சிய கட்டமைப்பு மற்றும் நிதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பட்ஜெட்டானது அனைத்து துறைகளிலும் தொட முயற்சித்து உள்ளது. அதே நேரம் கட்டமைப்பு மற்றும் நிதித்துறையில் விரைவில் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை. மேலும் ஒரு நடுத்தர கால நிதி ஒருங்கிணைப்பு விரைவில் தேவை என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நாம் முன்னறிவித்ததை விட, இந்தியா தற்போது பலவீன சூழலில் உள்ளது. ஆக இந்த ஆண்டு அதிக நிதி வசதி கொண்ட நிலைப்பாடு பொருத்தமானதாக நாங்கள் கருதுகிறோம். இந்த நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ஜனவரி மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் 4.8% ஆக குறைத்தது கவனிக்கதக்கது. இது முன்பு 6.1%ஆக குறைத்தது கவனிக்கதக்கது. இதே 2020ல் இந்த அமைப்பு 2020ல் 5.8% ஆகவும், இதே 2021ல் 6.5% ஆகவும் வளர்ச்சி இருக்கும் என்றும் கணித்துள்ளது.

 

இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் இந்தியாவின் வளர்ச்சி மேலும் குறையும், இதனால் இதை மீண்டும் மாற்ற வேண்டியிருக்கும் என முன்னரே கூறியிருந்தது கவனிக்கதக்கது. மேலும் இந்த நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சியை மட்டும் அல்ல, சர்வதேச பொரூளாதாரத்தின் மதிப்பையும் இந்த நிதியம் குறைத்தது. முன்னதாக 2019ல் வளர்ச்சி 3% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதை 2.9% கணித்திருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IMF said Indian economic needed urgent reforms

IMF spokes person Gerry rice said, Indian economy a weaker than early, so There is an urgent need for more structural and financial sector reforms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X