டெல்லி: சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தினை 6.8% ஆக குறைத்துள்ளது.
இது முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் 7.4% ஆக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் வளர்ச்சி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை சரிவு
இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் வரவிருக்கும் காலாண்டிலும் வளர்ச்சி பின்னடைவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% ஆக வளர்ச்சி காணலாம் என ஐஎம் எஃப் கணிப்பில் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளின் நிலை?
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின் படி நடப்பு ஆண்டில் வளர்ச்சி விகிதம்..
இந்தியாவில் - 6.8%
ஸ்பெயின் - 4.3%
இங்கிலாந்து - 3.6%
கனடா - 3.3%
இத்தாலி - 3.2%
சீனா - 3.2%
ஐரோப்பிய பகுதி -3.1%
பிரேசில் - 2.5%
பிரான்ஸ் - 2.5%
மெக்ஸிகோ - 2.1%
ஜப்பான் - 1.7%
அமெரிக்கா - 1.6%
ஜெர்மனி - 1.5% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது.
உலக வங்கியின் கணிப்பு
கடந்த வாரம் உலக வங்கியானது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி வளர்ச்சியினை 6.5% ஆக குறைத்துள்ளது. இது முன்னதாக 7.5% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. 2023ம் நிதியாண்டில் இந்தியாவிற்கான ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி திருத்தம் செய்வது இது மூன்றாவது முறையாகும்.
இந்தியா பரவாயில்லையோ
மேற்கண்ட பட்டியலில் மற்ற வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவின் வளரச்சி விகிதம் பரவாயில்லை என்றே கூறலாம். சொல்லப்போனால் மற்ற அனைத்து நாடுகளின் வளர்ச்சி விகிதம், இந்தியாவினை விட குறைவு என்று தான் கூற வேண்டும்.
உலகின் வளர்ச்சி
2022ம் ஆண்டில் சர்வதேச வளர்ச்சி விகிதமானது 3.2% ஆக வளர்ச்சி காணலாம் என ஐஎம்எஃப் திருத்தம் செய்துள்ளது. இது 2023ல் 2.7% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது


Click it and Unblock the Notifications