இந்திய பொருளாதாரம் 2வது அலையில் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்று ஒன்றிய அரசு கூறினாலும், சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து 2022ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பைத் தொடர்ந்து குறைத்து வருகிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இந்நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் 2022ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதற்கு முன்பு சர்வதேச நாணய நிதியம் நடப்பு நிதியாண்டில் இந்தியா 12.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருந்தது, ஆனால் மார்ச் - மே மாதம் வரையில் இருந்த 2வது கொரோனா தொற்று அலை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகளவில் பாதித்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சி
இதேவேளையில் 2021ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு அளவீடு என்பது எவ்விதமான மாற்றும் இல்லாமல் 6 சதவீதமாகத் தொடர்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் பாதித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இதேபோல் 2023ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது 8.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது சர்வதேச நாணய நிதியம் அமைப்பு. இது முந்தைய கணிப்பை விடவும் 1.6 சதவீதம் அதிகமாகும்.
சீனா
இந்தியாவைப் போல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பையும் சர்வதேச நாணய நிதியம் அமைப்பு 0.3 சதவீதம் குறைந்து 8.1 சதவீதமாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கொரோனா தொற்று உடன் மழை வெள்ளம், உற்பத்தி பாதிப்பு, மூலப் பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தொய்வு ஆகியவை சீனாவின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளது.


Click it and Unblock the Notifications