ரெசிஷன் நினைக்கும் அளவுக்கு மோசமா இருக்காது.. ஐஎம்எப் கொடுத்த குட் நியூஸ்..!

உலகம் முழுவதும் ரெசிஷன் அச்சத்தில் இருக்கும் வேளையில் ஐஎம்எப் இன்று முக்கியமான அறிக்கையை வெளியிட்டு அச்சத்தைக் குறைத்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

இதேவேளையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவித்துள்ள காரணத்தால் இந்திய முதலீட்டாளர்கள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஐஎம்எப் சர்வதேச பொருளாதாரம் குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் என்ன அறிவித்தது.

சீனா

சீனா

 

சீனா கொரோனா தொற்றுக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியதன் மூலம் அந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பட்டு உள்ள வேளையில் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சாதகமான சூழ்நிலை உருவாகியது மட்டும் அல்லாமல் ரெசிஷன் அச்சம் குறையும் வகையில் பொருளாதார வளர்ச்சி அளவீடு மேம்படும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

உலக நாடுகள் தற்போது அதிகப்படியான பணவீக்கம், அதிகப்படியான வட்டி விகிதம், ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் சீனாவின் எழுச்சி மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார வளர்ச்சி

சர்வதேச பொருளாதார வளர்ச்சி

இதன் வாயிலாக ஐஎம்எப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் 2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதம் வரையில் உயரும் என்று தெரிவித்துள்ளது.

ஐஎம்எப் கணிப்பு

ஐஎம்எப் கணிப்பு

ஐஎம்எப் அக்டோபர் மாத கணிப்பில் 2.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது இதை உயர்த்தியுள்ளது. இதேவேளையில் 2022 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் 3.4 சதவீதமாக இருந்தது என ஐஎம்எப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

ஐஎம்எப் அமைப்பு சுமார் 190 நாடுகளின் பொருளாதாரத்தைக் கண்காணித்து வரும் வேளையில், மத்திய வங்கிகளின் தொடர் வட்டி விகித உயர்வால் பணவீக்கம் 2023 ஆம் ஆண்டுக் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2022 ல் சர்வதேச பணவீக்க அளவு 8.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023ல் 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் அமைப்பு 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளது.

காலண்டர் ஆண்டு

காலண்டர் ஆண்டு

ஆனால் காலண்டர் ஆண்டு அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

இந்தியாவின் ஆதிக்கம்

இந்தியாவின் ஆதிக்கம்

இதோடு இந்தியா வளர்ச்சிப் பாதையில் மிகவும் பிரகாசமாக உள்ளது, இதேபோல் 2022 மற்றும் 2023 சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் பெரும் பெரிய பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+