கடந்த வாரம் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதமானது மாற்றமில்லாமல் அப்படியே 6.5% ஆக தொடரும் என அறிவிக்கப்பட்டது. இது உண்மையில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவாக பார்க்கப்பட்டது.
ஏனெனில் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது கட்டாயம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதற்கு எதிராக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இது குறிப்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த கூட்டத்தில் பணவீக்கம் என்பது 2024ம் ஆண்டில் 5.2% ஆக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 5.3% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது. இதே ரியல் ஜிடிபி விகிதமானது 2024ம் நிதியாண்டில் 6.5% ஆக வளர்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னதாக 6.4% ஆக வளர்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இந்த காலக்கட்டத்தில் இந்திய பொருளாதாரம் இந்த அளவுக்கு வளர்ச்சி காணலாம் என கூறப்படுவது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், தொடர்ந்து பணவீக்கம் என்பது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் வீடு வாங்குபவர்கள், வீட்டுக் கடன் வட்டி விகிதம் என எதுவும் மாறாமல் இருக்கும். இதனால் வட்டி அதிகரிப்பதற்கான அச்சம் என்பது இல்லை. பலரும் தற்போதைய வட்டி விகிதத்தில் இருந்து மாறாமல் இருப்பதே நல்ல விஷயமாக பார்க்கின்றனர். ஏற்கனவே வட்டி விகிதம் சற்றே அதிகமாக உள்ள நிலையில், இந்த முறை வட்டி அதிகரிப்பு என்பது இல்லை என்பது கடன் வாங்கியோருக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
எனினும் பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி விகிதம் என்பது அதிகரிக்காது. ஏற்கனவே இருக்கும் விகிதமே தொடரும் எனலாம். எனினும் இது மியூச்சுவல் பண்டுகள், ரியல் எஸ்டேட் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம். இது குறிப்பாக ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக அமையலாம்.

அதிகரித்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு மற்றும் நடப்பு கணக்கு பற்றாகுறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நிதி நிலையிலும் ஒரு ஸ்திரத்தன்மை என்பது இருக்கலாம். ஆக சந்தைக்கு நேர்மாறாக தற்போது வட்டி விகிதமானது உள்ளது.
இது ரியல் எஸ்டேட், வாகனத்துறை, வங்கிகள், நிதியியல் மற்றும் பல்வேறு துறைகளில் தாக்கம் என்பது இருக்கலாம். இது தவிர பொறியியல் துறை, மூலதன பொருட்கள் துறை என பலவும் சாதகமான வளர்ச்சியினை எதிர்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications