சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வங்கித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதில் சில முக்கிய கட்டுப்பாடுகளும் அடங்கும். அந்த வகையில் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC), கடந்த மே 8ஆம் தேதி ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தது. அதன்படி ஒரு நபர் ரூ. 20,000 ரூபாய்க்கு மேல் கடனை ரொக்கமாக பெற முடியாது என்று அறிவித்தது. அதேபோல இந்த நடைமுறையை கண்டிப்பாக NBFC நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
கடந்த மே 8ஆம் தேதி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதன்படி வருமான வரிச் சட்டம் 1961 கீழ், பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி கடன் பெறும் ஒரு நபர் ரூ. 20,000 மேல் கடனை ரொக்கப் பணமாக பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல ரொக்க பரிமாற்றத்தின் போது வருமானவரித்துறை வழங்கும் உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் NBFC நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இது பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் பண அடிப்படையிலான நடைமுறைகள் தொடர்புடைய அபாயங்களை குறைப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. இதனால் பயன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து பார்ப்போம். தங்க கடன்களை பெரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20,000 ரொக்கமாக கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தும் போது ஆரம்பத்தில் சில சவால்களை ஏற்படுத்தலாம். பாரம்பரியமாக பல கடன் வழங்குபவர்களும் அவர்களின் வசதி மற்றும் உடனடித் தன்மை காரணமாக ரொக்கப் பட்டுவாடாக்கள் செய்தனர். இருப்பினும் ரிசர்வ் வங்கி உத்தரவின்படி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகள் மற்றும் மின்னணு பரிமாற்றங்களை பெறுவதற்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரொக்க பணமாக செலுத்துவதால், வாடிக்கையாளர்கள் வெளியில் பணத்தை எடுத்துச் செல்லும்போது திருட்டு, மோசடி போன்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுவே வங்கி கணக்கில் செலுத்தும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது சற்று குறைய தான் செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்வதை விட வங்கி கணக்கில் செலுத்துவது, இன்னும் பாதுகாப்பானது.
நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த செயல் முறையை நடைமுறைப்படுத்த தகுந்த தொழில்நுட்பத்தோடு உள்ளனர். இதனால் வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் பணத்தை செலுத்துவது அவ்வளவு பெரிய வேலையாக நிதி நிறுவனங்களுக்கு இருக்காது. இருப்பினும் வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்றவர்களுக்கு ஆரம்பத்தில் இது சிக்கலாக இருக்கலாம். ஆனால் மிகவும் பாதுகாப்பான முறையாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது இருக்கிறது முதலில் இந்த நடைமுறை கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம் தானே!
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications