இந்தியாவின் பிரபல மதுபான நிறுவனமாக பெர்னோ ரிக்கார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Pernod Ricard India Pvt) இருக்கிறது. இந்நிறுவனத்தின் 'இம்பீரியல் புளூ' (Imperial Blue) என்ற பிரபல விஸ்கி பிராண்டை ரூ.4,150 கோடி மதிப்பில் வாங்கவுள்ளதாக திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Tilaknagar Industries Ltd) நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் விநியோக ஒப்பந்தங்களையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'இம்பீரியல் புளூ' என்பது இந்தியாவில் மிகவும் விற்பனையாகும் விஸ்கி பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்டை கையகப்படுத்துவதன் மூலம் திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் தனது பிராண்டின் மதிப்பையும், சந்தையில் பங்கு அளவையும் உயர்த்திக்கொள்ளும். இந்திய மதுபானத் துறையில் இது ஒரு மிகப்பெரிய வணிக நகர்வாக பார்க்கப்படுகிறது.

இந்த இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்படி, முழு தொகையான ரூ.4,150 கோடியையும் திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் உடனே செலுத்தாது. இதில் ரூ.282 கோடி ஒப்பந்தம் முடிந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு தான் செலுத்த வேண்டும். இதனால், திலக்நகர் நிறுவனத்திற்கு ஆரம்ப கட்டத்தில் நிதிச் சுமை குறைய வாய்ப்புள்ளது.
திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்தியாவின் 3-வது பெரிய விஸ்கி பிராண்டான 'இம்பீரியல் புளூ'வை வாங்கியதால், விஸ்கி சந்தைக்கு முன்னணியில் நுழைந்துள்ளது. இந்த இம்பீரியல் புளூ ஆண்டுக்கு 2.2 கோடி பாட்டில்கள் விற்பனையாகி வருகிறது. இதை தற்போது வாங்கியதன் மூலம் விஸ்கி சப்ஃபிள் செக்மெண்டில் (whisky segment) முக்கிய பங்குதாரராக திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மாறுகிறது.
பிரெஞ்ச் மதுபான நிறுவனமான பெர்னோ ரிக்கார்ட், இந்தியாவின் பிரபல விஸ்கி பிராண்டுகளில் ஒன்றான இம்பீரியல் புளூவை விற்பனை செய்தது வியாபார முடிவல்ல. இது, நிறுவனத்தின் புதிய நோக்கத்தைத்த் தெரியப்படுத்தும் முக்கியமான பங்காகும். 'இம்பீரியல் புளூ' என்பது மக்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய மதுபான பிராண்டு ஆகும். ஆனால், பெர்னோ ரிக்கார்ட் நிறுவனம் இப்போது உயர்தர வாடிக்கையாளர்கள் நோக்கி நகர விரும்புகிறது. அதனால், விலை குறைந்த பிராண்டுகளை விற்று விலகிச் செல்கிறது. மேலும், அதிக லாபம் தரும் பிராண்டுகள் மீது மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறது.
தற்போது Royal Stag, Blenders Pride, Chivas Regal, Jameson ஆகிய பிராண்டுகளின் மீது தான் பெர்னோ ரிக்கார்ட் நிறுவனத்தின் முழு கவனமும் இருக்கிறது. இந்த பிராண்டுகள் விலை உயர்ந்தாலும் நிறுவனத்திற்கு அதிக லாபம் தரக்கூடியவை தான். இதன் மூலம் தயாரிப்புகள் குறைந்து, பிராண்டுகளின் செயல்திறன் மேம்படும். இந்திய சந்தையில் அதிக வருமானம் தரும் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்த முடியும். இந்த மாற்றம், நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், இந்திய சந்தையில் மேலான நிலைக்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மதுபான வணிகத்தில் பெரிய நிறுவனம் ஆக வேண்டும் என திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நினைக்கிறது. இதற்கு, வித்தியாசமான பிராண்டுகளும், பலவகையான தயாரிப்புகளும் வேண்டும். இந்த பெரிய ஒப்பந்தத்துக்கு தேவையான பணத்தை திலக்நகர் நிறுவனம், 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரை கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த கடனுக்காக, Avendus Capital என்ற நிறுவனம் நிதி ஆலோசகராக உதவி செய்து வருகிறது.
திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெர்னோ ரிக்கார்டின் 'இம்பீரியல் புளூ' பிராண்டை வாங்கும் ஒப்பந்தம், Competition Commission of India உட்பட தேவையான அனைத்து அதிகாரப்பூர்வ அனுமதிகளுக்கும் உட்பட்டதாகும். அனைத்து அனுமதிகளும் கிடைக்கும்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முடிந்து, அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதுபானத் துறையில் சிறந்த மற்றும் பெரிய வியாபார ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, Diageo நிறுவனம் United Spirits-ஐ ரூ. 10,000 கோடி அளவில் வாங்கிய ஒப்பந்தம் தான் மிகப் பெரியதாக இருந்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications