சென்னை: இன்று நாட்டில் உள்ள பலரும் ஏதோ ஒரு கடனை பெற்று EMI செலுத்தி வருகின்றனர். அது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு கடனை பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல. நீங்கள் தேவையான ஆவணங்களை ஒப்படைத்து மேலும், கடன் வழங்குபவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். அதேபோல் கடன் பெற்ற பிறகு, அதனை சரிவர திருப்பிச் செலுத்த வேண்டும்.
எனவே இந்தப் பதிவில் உங்கள் வீட்டுக் கடன் EMIகளை தாமதம் இன்றி செலுத்துவது எவ்வளவு முக்கியமானது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கிரெடிட் ஸ்கோரைப் பாதுகாத்தல்: உங்கள் EMI-களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, உங்கள் கடன் வரலாற்றை சரிவர பராமரிக்க மிக முக்கியமானதாகும். Cibil, Experian போன்ற கிரெடிட் நிறுவனங்கள், உங்களின் கடன் பரிவர்த்தனைகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
நீங்கள் எவ்வளவு பொறுப்புடன், உங்களது கடனை திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள்.. என்பதை பொறுத்தே உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் இருக்கும். நீங்கள் நேரத்திற்கு அதனை செலுத்தி இருந்தால் அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருக்கும். கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று எழுத்து எண் ஆகும். அவை 300 முதல் 900-க்குள் இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால், பிற்காலத்தில் நீங்கள் கடன் பெறுவது சுலபமாக இருக்கும்.
அபராதக் கட்டணங்களைத் தவிர்க்கலாம்: வங்கிகள் மற்றும் கடன் தந்த நிதி நிறுவனங்கள், பொதுவாக EMIகளை தாமதமாகச் செலுத்துவதற்கு அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிக்கின்றன. இந்த அபராதங்களில் தாமத கட்டணம், அதிகரித்த வட்டி விகிதங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். உங்கள் EMIகளை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் இந்த தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்கலாம்.
எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்: தாமதமான அல்லது தவறவிட்ட EMI, உங்களின் ஒட்டுமொத்த நிதி வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அபராதங்கள் மற்றும் வட்டி கட்டணங்கள் கூடுவதால், நீங்கள் பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். மேலும் தவறவிட்ட இரண்டு, மூன்று EMIகளை சேர்த்து செலுத்துவது, மாத சம்பளக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். எனவே சரியான நேரத்தில் EMI செலுத்துவது, உங்கள் வீடுகளை கடன் தருபவர்கள் கைப்பற்றும் அபாயத்திலிருந்து, உங்களை பாதுகாக்கிறது.
மன அமைதி: வீட்டுக் கடன் EMIகள் போன்ற நிதி கடமைகளைச் சரிவர நிர்வகிக்கும் போது மன அழுத்தங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட முடியும். ஏனெனில், EMIகளை சரியான நேரத்தில் செலுத்தாமல் இருந்தால், அதை நினைத்துக் கொண்டு பலர் கவலையில் மூழ்கி விடுவர். எனவே இதனை பொறுப்புடன் செய்யும்போது உங்கள் வீடு பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மன அமைதியைப் பெற முடியும். மேலும் கடன் சுமை இல்லை என்பதை மனதில் கொண்டு உங்கள் வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் உங்களால் கவனம் செலுத்த முடியும்.
More From GoodReturns

ரெப்போ வட்டியை விடுங்க!! RBI வெளியிட்ட இந்த அறிவிப்ப கவனிச்சீங்களா? கடன் வாங்குனவங்களுக்கு நிம்மதி!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications