ஏப்ரல் 1 முதல் இத்தனை மாற்றங்களா.. LPG விலை முதல் வருமான வரி வரை..!

வருமான வரி செலுத்துவோருக்கு மட்டும் அல்லாமல் சாமானிய மக்களுக்கும் இந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மிகவும் முக்கியமானது என்றால் மிகையில்லை.

ஒருப்பக்கம் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் வேளையில், வரி விதிப்பு முதல் பல முக்கியமான மாற்றங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி வர உள்ளது. அனைத்தைவிடவும் முக்கியமாக அதிக வருமானம் கொண்டவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதலே வரி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட வேண்டும்.

இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் வரப்போகும் முக்கியமான மாற்றங்கள் என்னென்ன..?

 7 லட்சம் ரூபாய்

7 லட்சம் ரூபாய்

புதிய வருமான வரி முறையின் கீழ் 7 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்கும். இது பட்ஜெட் 2023 அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

 வருமான வரி முறை

வருமான வரி முறை


வருமான வரி முறை குறித்து வருமான வரி செலுத்துவோர் தங்கள் விருப்பத்தை அறிவிக்காத சம்பளம் பெறும் நபர்களுக்கு புதிய வருமான வரி முறை டீபால்ட் ஆக தேர்வு செய்யப்படும். இந்த விதிமுறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேவைப்பட்டால் வருமான வரி பழைய வருமான வரி முறைக்கு மாறும் விருப்பத்தை தேர்வுசெய்யது மாற்றிக்கொள்ள முடியும்.

 விடுப்புப் பயணக் கொடுப்பனவு

விடுப்புப் பயணக் கொடுப்பனவு

அரசு சாரா ஊழியர்களுக்கு, விடுப்புப் பயணக் கொடுப்பனவுக்கான வரம்பு 3 லட்ச ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 3 லட்ச அளவீடு 2002ஆம் ஆண்டு முதல் இருந்தது, இப்புதிய 25 லட்சம் ரூபாய் அளவீடு ஏப்ரல் 1 முதல் துவங்கும் 2023-24 ஆம் நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

 ஆதார் பான் இணைப்பு

ஆதார் பான் இணைப்பு

மார்ச் 31, 2023க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால், முடக்கப்படும் என்ற இருந்த நிலையில் இது ஜூன் 30 வரையில் நீக்கப்பட்டதால் பிரச்சனை இல்லை. ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதியே ஆதார் - பான் இணைப்பு உறுதி செய்வது உத்தமம். இல்லையெனில் முடக்கப்பட்ட பான் கார்ட்-ஐ மீண்டும் செயல்படுத்த வேண்டுமெனில் அபராதம் செலுத்த வேண்டும்.

 பரிவர்த்தனை கட்டணம்

பரிவர்த்தனை கட்டணம்

6 சதவீத பரிவர்த்தனை கட்டணம் திரும்பப் பெறப்படுவதால், தேசிய பங்குச் சந்தையின் கேஷ் மற்றும் டெரிவேட்டிவ் பிரிவில் பங்கு வர்த்தகம் இனி மலிவானதாக மாறும்.

 ஐஆர்டிஏஐ

ஐஆர்டிஏஐ

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) கமிஷன் கொடுப்பனவுகளுக்கான தனிநபர் வரம்பை மாற்றியமைத்து, காப்பீட்டாளர்களின் நிர்வாகச் செலவுகளுக்கான ஒட்டுமொத்த வரம்பைக் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கொண்டு வர உள்ளது. இது ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீட்டாளர்கள் செலவுகளை நிர்வகிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையைப் பெறுவார்கள்.

 டெபிட் மியூச்சுவல் ஃபண்டு

டெபிட் மியூச்சுவல் ஃபண்டு

இந்திய நிறுவனங்களின் ஈக்விட்டி பங்குகளில் 35 சதவீதத்திற்கும் குறைவான முதலீடு கொண்ட டெபிட் மியூச்சுவல் ஃபண்டுகள் மீது குறுகிய கால மூலதன ஆதாயங்களாக வரி விதிக்கப்படும், முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால வரிச் சலுகைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது.

 ஆயுள் காப்பீட்டு

ஆயுள் காப்பீட்டு

யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் (யுலிப்) தவிர, ஆண்டு பிரீமியம் 5 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு வரி விதிக்கப்படும்.

 மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் அதிகபட்ச வைப்பு வரம்பு ₹15 லட்சத்தில் இருந்து ₹30 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. இப்புதிய நடைமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது, இந்த சலுகையை பயன்படுத்தி மூத்த குடிமக்கள் கணக்கில் 30 லட்சம் வரையில் டெபாசிட் செய்ய முடியும்.

  பிரிவு 44ஏடி

பிரிவு 44ஏடி

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உள்ளிட்ட சில குறிப்பிட்ட வணிகங்களுக்கான பிரிவு 44ஏடி-யின் கீழ் விற்றுமுதல் வரம்பு ₹2 கோடியிலிருந்து ₹3 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 HUID முத்திரை

HUID முத்திரை

ஏப்ரல் 1 முதல் ஆறு இலக்க HUID (ஹால்மார்க் தனித்துவ அடையாளத்துடன்) ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

தங்கம்

தங்கம்

உலோகமாக வைத்திருக்கும் தங்கத்தை, எலக்ட்ரானிக் தங்க ரசீதுக்கு (EGR) மாற்றினால், மூலதன ஆதாய வரி ஏதும் இருக்காது. இப்புதிய சலுகை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

 ஆன்லைன் கேமிங்

ஆன்லைன் கேமிங்

ஆன்லைன் கேமிங்கில் இருந்து பெறப்படும் வருமானம் 30% டிடிஎஸ் வரிக்கு உட்பட்டது. தற்போது, ​​ரூ.10,000 க்கு மேல் வெற்றி பெரும் பணத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.

 ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

BS-VI கட்டம் II எமிஷன் விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்த உள்ளதால், உள்ளீட்டு செலவு பணவீக்கம் காரணமாக வாகனங்களின் விலைகள் உயர வழிவகுக்கும்.

 எல்பிஜி சிலிண்டர்

எல்பிஜி சிலிண்டர்

புதிய நிதியாண்டின் முதல் நாளில் பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை மாற்றியமைப்பதால், எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+