இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வாழ்நாளில் மிகப்பெரிய ஆசையே அவர்களுக்கென சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பதுதான். அதிலும் மாத வருமானம் வாங்குவோர் மற்றும் வாடகை வீட்டில் இருப்போருக்கு சொந்தமாக வீடு வாங்குவது ஒரு பெரிய லட்சியமாகவே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. ஏனெனில், வீடு கட்டுவதற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. சில திட்டங்களின் கீழ் அரசிடமிருந்து மானிய உதவியும் கிடைக்கிறது.
நீங்கள் புதிதாகவோ அல்லது பழைய வீட்டை வாங்கப் போகிறீர்கள் எனில் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதையும், சரிபார்க்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
வீடு/ நிலம் வாங்கும் முன் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்!
உரிமையாளர் விவரங்கள்!
நீங்கள் வாங்கும் வீடு அல்லது நிலத்தின் உரிமையாளரின் இடத்தின் 30 வருட வில்லங்கச் சான்றிதழை முதலில் சரிபார்க்க வேண்டும். 30 வருடங்களில் நிலம் யாரிடமிருந்து, யாருக்கெல்லம் கைமாறி உள்ளது, வீடு/அல்லது நிலம் சரியான முறையில் சரியான நபருக்கு சென்றுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
வில்லங்கச் சான்றிதழ்!
நீங்கள் வாங்கும் இடம் அல்லது வீடு எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் வில்லங்கச் சான்றிதழ் பெற்றுள்ளதா என சரிபார்க்க வேண்டும். மேலும் மூலப்பத்திரத்தின் ஒரிஜினலையும் நீங்கள் சரி பார்ப்பது அவசியம்
விவசாய/ அரசுக்கு சொந்தமான நிலம்!
நீங்கள் வாங்கும் வீடு/நிலம் விவசாய நிலமா அல்லது நிலத்தின் அருகே அரசு சார்ந்த நிலங்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சரிபார்க்க வேண்டும்.
பத்திரம் சரிபார்த்தல்!
நீங்கள் வாங்கும் நிலத்தின் உரிமையாளரிடம் சரியான பட்டா உள்ளதா என்பதையும் சரிபார்பபது அவசியம். மேலும் நிலத்தின் அளவு பட்டா மற்றும் சிட்டா அளவின்படி உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும்.
பதிவு செய்தல் (Registration)
இந்தியாவில் ரியல் எஸ்டேட் பதிவு என்பது சற்று சிக்கலான செயல்முறையாகத்தான் உள்ளது. நீங்கள் புதிய அல்லது பழைய வீட்டை வாங்கும்பொழுது பத்திரப்பதிவில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டாலோ அல்லது சரி வரச் செய்யவில்லை என்றாலோ, அது உங்களுக்கு நீண்ட காலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்!
1. வாங்குபவர் மற்றும் விற்பவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
2. இரு தரப்பினரின் ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற அடையாளச் சான்றுகள் தேவை
3. கட்டுமானத்தை முடித்ததற்கான சான்றிதழ்.
4. முத்திரை கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீது
5. சமீபத்திய சொத்து பதிவு அட்டை நகல்
6. நகராட்சிக்கு செலுத்தப்பட்ட வீட்டு வரிச் சான்றிதழ்
7. NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்)
8. நபர் அங்கீகாரம் பெற்றவர் எனபதற்கான சான்றிதழ் (CMDA/DTCP approved)
9. சொத்துப் பதிவேடு அட்டை நகல்
10. இறுதியாக நீங்கள் வாங்கும் நிலம் சரியான முறையில் உரிமையாளர் விற்பனை செய்ததற்கான சான்றிதழ் மற்றும் அதன் நகல்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications