சென்னை: பொது வருங்கால வைப்பு நிதிகளில் முதலீடு செய்து வரும் நபரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது. PPF கணக்குகளில் மாதம் மாதம் முதலீடு செய்பவராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி தொகையை செலுத்தி விடுங்கள். இல்லை என்றால் அதற்கான வட்டி வரவு வைக்கப்படாது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
Public Provident Fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கு அறியப்பட்ட முதலீட்டுத் திட்டமாகும். அரசு முதலீட்டு திட்டங்கள் பொதுவாக லாபமானதாகவும் மற்றும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும். எனவே மக்கள் விரும்பும் முதலீட்டு திட்டங்களில் PPF கணக்குகளும் ஒன்று.

1968 ஆம் ஆண்டு மக்கள் நீண்ட காலத்திற்கு பணத்தைச் சேமிக்க உதவும் வகையிலும், அவர்களின் நிதியை சிறப்பாக திட்டமிட ஊக்குவிப்பதற்காகவும், இந்த திட்டம் தொடங்கப்பட்டது. மக்களுக்கு தங்கள் பணத்தைச் சேமிக்க பாதுகாப்பான வழியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தற்போது PPF கணக்குகளில் முதலீடு செய்வோருக்கு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், PPF கணக்குகளில் மாதம் மாதம் முதலீடு செய்வோர் தங்களது முதலீட்டு தொகையை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். நீங்கள் இதனை செய்யவில்லை என்றால், அந்த மாதத்திற்கான வட்டி வரவு வைக்கப்படாது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மாதத்தின் 6ஆம் தேதியில் முதலீடு செய்தால், முதலீடுகளுக்கான வட்டி உங்களுக்கு கிடைக்காது. எனவே, தேதியைப் பார்த்து கொண்டு கவனமாக முதலீடு செய்யவும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகையை 15 ஆண்டுகள் எடுக்க முடியாது. ஒருவேலை அதற்கிடையில் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் 5 ஆண்டுகள் பின்னரே நாம் எடுக்க முடியும்.
இந்த வகை முதலீடுகளுக்கு தற்போது 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தினை இந்தியாவில் உள்ள எந்த தபால் அலுவலக கிளைகளில் வேண்டுமானாலும் திறக்கலாம். அனைத்து இந்திய குடிமகனும், இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய தகுதியானவர்கள். மற்ற திட்டங்களைப் போல இந்தத் திட்டத்தில் கூட்டுக் கணக்கைத் திறக்க முடியாது. மேலும் NRIகள் இந்த PPF கணக்கைத் திறக்க தகுதியற்றவர்கள்.
மேலும், இந்த திட்டத்தினைப் பயன்படுத்தி ஒருவர், ஒரு PPF கணக்கை மட்டுமே திறக்க முடியும். அதை மீறி இரண்டு மூன்று கணக்குகளை திறந்தால் மற்ற கணக்குகள் டிஆக்டிவேட் செய்யப்படும். மேலும் அதற்கான வட்டியும் வழங்கப்பட மாட்டாது. சிறு குழந்தைகளுக்கும் PPF கணக்கைத் திறக்கலாம். அவர்களது கணக்கை அவர்கள் பெற்றோர் யாரேனும் ஒருவர் நிர்வகிக்கலாம்.
நீங்கள் இதில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 500 முதல் ரூ. 1,50,000 வரை எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, பான் கார்டு, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.100 ஆகியவைத் தேவைப்படும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications