மார்ச் மாதம் என்றாலே தொழில் செய்பவர்கள் முதல் மாத வருமானம் பெறுபவர்கள் வரை அனைவருக்கும் முக்கியமான மாதமாகும். ஏனெனில் நிதியாண்டு முடிவடையும் மாதம் தான் மார்ச் மாதம். நீங்கள் உங்கள் ஆதார்-பான் கார்டு இணைப்பு தொடங்கி, வருமான வரியை சேமிக்கவும் இந்த மாதம் தான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.
அந்த வகையில் மார்ச் மாதத்திற்குள் மக்கள் அனைவரும் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஆதார்-பான் இணைப்பு!
ஆதார் எண்ணுடன் உங்கள் பான் எண்ணை இணைப்பது மிகவும் முக்கியம். மார்ச் 31 க்குள் நீங்கள் பான் உடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால் உங்களால் வருமான வரியை செலுத்த முடியாது. உங்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க இதுவே கடைசி வாய்ப்பு. மார்ச் 31 க்குள் இணைத்து அதிக வரி மற்றும் அபராதம் செலுத்துவதை தவிர்க்கலாம்.
அனைத்திற்கும் மேலாக மார்ச் 31-க்குள் இணைக்காவிடில் பான் கார்டு இயங்காது, அரசால் ரத்து செய்யப்படும்.
வரி சேமிப்பு!
நீங்கள் அதிக வரியிலிருந்து தப்பிக்க இம்மாத இறுதிக்குள் வருமான வரியை சேமிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய இதுவே கடைசி மாதமாகும். NPS, PPF, செல்வமகள் சேமிப்புத் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரி விலக்கை பெறலாம்.
அட்வான்ஸ் டாக்ஸ்
2022-2023 நிதியாண்டிற்கான முன்கூட்டிய வரி செலுத்துதலின் இறுதித் தவணையைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி மார்ச் 15, 2023 ஆகும்.
மார்ச் 15 ஆம் தேதிக்குள் 100 சதவீத முன்கூட்டிய வரி அதாவது
அட்வான்ஸ் டாக்ஸ்-ஐ வரி செலுத்துவோர் செலுத்த வேண்டும். வருமான வரித் துறையின்படி, வரி செலுத்துபவரின் மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பு 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தால் வரிப் பொறுப்பை முன்கூட்டிய வரி வடிவில் செலுத்த வேண்டும். மேலும், மார்ச் 31 வரை செலுத்தப்படும் எந்த வரியும் முன்கூட்டிய வரியாகக் கருதப்படும்.
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா!
இதில் 60 வயதிற்கு மேற்பட்டோர் முதலீடு செய்தால் அவர்களுக்கு அரசிடமிருந்து ஓய்வூதியம் கிடைக்கும். நீங்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனில் இத்திட்டத்தில் முதலீடு செய்ய இதுவே கடைசி வாய்ப்பாகும்.
ஏனெனில் மார்ச் 31 உடன் இத்திட்டம் முடிவடைவதாக அரசு அறிவித்துள்ளது. எனவே மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டத்தில் முதலீடு செய்து அரசின் ஓய்வூதியத்தை பெற உடனே முதலீடு செய்யுங்கள்.
மேலும் இதில் முதலீடு செய்ய அதிகபட்ச நுழைவு வயதுக்கு எவ்வித வரம்பும் இல்லை. அதேசமயம் இத்திட்டத்தின் கீழ் ஒரு மூத்த குடிமகன் அவர்களின் மொத்த பாலிசி தொகை ரூ.15 லட்சத்தை தாண்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட்!
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலிடுகளில் இன்னும் உங்கள் நாமினியை சேர்க்கவில்லை என்றால், உங்கள் நாமினியை இணைக்க மார்ச் 31 கடைசி நாளாகும். மார்ச் 31 க்குள் நாமினியைச் சேர்க்கவில்லை என்றால், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் முடக்கப்படும் என்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்சூரன்ஸ் பாலிசி!
நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் வெளியிட்ட பட்ஜெட்டில், 5 லட்சத்திற்கும் மேலான வருடாந்திர பிரிமீயம் கொண்ட LIC பாலிசிக்கு இனி வரி விலக்கு பலன் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறை ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications