சென்னை: மத்திய பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்ட வரி மாற்றங்கள் அனைத்தும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இவை அனைத்தும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆறு முக்கியமான அறிவிப்புகள் ஆகும்.
1. பட்ஜெட்டில் பியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (futures and options) மீதான செக்யூரிட்டி பரிவர்த்தனை வரியை (STT) 0.02 % மற்றும் 0.01% என்ற அளவுக்கு அரசு உயர்த்தி உள்ளது. மேலும் பங்குகளை திரும்ப பெறுவதன் மூலம் பெரும் வருமானத்திற்கு பயனாளிகளிடமே வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முக்கியமான மாற்றம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

2. பொதுவாக ஆதார் எண் இல்லாதவர்கள் பான் கார்டு விண்ணப்பம் செய்யும் போது அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தலாம் என்ற விதி அமலில் இருந்தது. அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்கும் விதமாக ஆதார் பதிவு எண்ணை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பான் கார்டுக்கான விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியாது.
3. அக்டோபர் 1 முதல் ஈவுத்தொகைகளைப் போல பங்குகளை திரும்பப் பெறுவது பங்குதாரர் நிலை வரிகளுக்கு உட்பட்டது. இதனால் முதலீட்டாளர்களுக்கு அதிக வரி சுமை ஏற்படப்போகிறது . கூடுதலாக இந்த பங்குகளை வாங்குவதற்கான செலவுகள் மூலதன ஆதாயங்கள் மற்றும் இழப்புகளை கணக்கிடுவதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
4. அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் பதிவு பத்திரங்களிலிருந்து 10 விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளோட்டிங் ரேட் கொண்ட பத்திரங்களும் அடங்கும். எனவே ஆண்டுக்கு ரூ.10,000க்கு மேல் கிடைக்கும் லாபத்திற்கு 10% டிடிஎஸ் கழிக்கப்படும்.
5. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிடிஎஸ் விகிதங்களுக்கு நிதி மசோதாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி sections 19DA, 194H, 194-IB, and 194M பிரிவுகளில் டிடிஎஸ் விகிதம் 5% இல் இருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஈ-காமர்ஸ் தளத்தினருக்கான டிடிஎஸ் விகிதமும் 10%இல் இருந்து 0.1%ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமும் வரும் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
6. மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரி வழக்குகளில் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகளை தீர்க்க Direct Tax Vivad Se Vishwas Scheme, 2024 ( DTVSV, 2024) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் டிசம்பர் 31, 2024 அன்று அல்லது அதற்கு முன் தாக்கல் செய்யும் வரி செலுத்துபவர்களுக்கு குறைவான தீர்வு தொகையை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications