சாமானிய மக்களை பாதிக்கும் சில முக்கிய அரசு விதிகள் ஜூன் மாத தொடக்கத்துடன் மாற்றப்பட உள்ளன. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதல் கேஸ் சிலிண்டர்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் நாள் நடக்க உள்ளது.
இது மட்டும் அல்லாமல் ஜூன் மாதம் பல முக்கியமான விஷயங்களை செய்து முடிக்க வேண்டிய கடைசி நாளும் உள்ளதால் மிகவும் முக்கியமான மாதமாக அனைத்து தரப்பு மக்களுக்கு விளங்குகிறது இந்த ஜூன் மாதம்.

இந்திய ரிசர்வ் வங்கி : இந்தியாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வங்கியின் முதல் '100 உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை' '100 நாட்களுக்குள்' கண்டறிந்து செட்டில் செய்வதற்கு வங்கிகளுக்கு '100 நாட்கள் 100 செலுத்தும்' திட்டத்தை மத்திய வங்கி துவங்க உள்ளது.
பெட்ரோல், டீசல், எல்பிஜி : பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஜூன் மாத தொடக்கத்தில் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலையை நிர்ணயம் செய்யும். இந்த வகையில் ஜூன் 01, 2023 முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நிலையில் மத்திய அரசம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனம் : ஜூன் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்குப் FAME-II திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு தற்போதுள்ள 40 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் சந்தையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை ஜூன் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளது.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் : 2023-24 ஆம் நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஜூன் 8 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்தியாவின் பணவீக்கம் குறைந்துள்ள காரணத்தால் இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது.
புதிய லாக்கர் ஒப்பந்தம் : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI ), பேங்க் ஆஃப் பரோடா மற்றும் சில பொதுத்துறை வங்கிகள், தங்கள் கிளைகளில் லாக்கர்களைப் பராமரிக்கும் வாடிக்கையாளர்களை ஜூன் 30, 2023க்குள் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுமாறு வலியுறுத்துகின்றன. விரைவில், அனைத்து வங்கிகளும் இதைப் பின்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மியூச்சவல் பண்ட முதலீடுக்கான புதிய விதிகள் : செபி அறிமுகப்படுத்திய புதிய விதியின் கீழ், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் மைனர், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் வங்கிக் கணக்கு, மைனர் அல்லது மைனரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் கூட்டுக் கணக்கில் இருந்து ஏற்றுக்கொள்ளப்படும். இப்புதிய விதி ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வரும்.
அதிக ஓய்வூதியம் திட்டம் : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடுவை மே 3 கடைசி தேதியாக முன்பு அறிவித்த நிலையில் ஜூன் 26 வரை நீட்டித்த நிலையில், இக்காலக்கட்டத்தை மீண்டும் நீட்டிக்குமா என்பது தெரியவில்லை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications