சென்னை: இந்தியாவில் பாதுகாப்பான முதலீடு என்ற உடன் அனைவரின் நினைவுக்கும் வருவது வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கிடைக்கக்கூடிய ஃபிக்ஸடு டெபாசிட் திட்டங்கள் தான்.
இதில் நாம் பணத்தை முதலீடு செய்து விட்டால் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை நமக்கு கண்டிப்பாக வட்டி வருமானமாக கிடைத்துவிடும். எனவே தான் பெரும்பாலான இந்தியர்கள் குறிப்பாக ஓய்வு பெற்றவர்களின் மிக விருப்பமான ஒரு சேமிப்பு மற்றும் முதலீட்டு கருவியாக ஃபிக்ஸடு டெபாசிட்கள் இருக்கின்றன.

குறைந்த வட்டி வருமானம் கிடைத்தாலும் அசல் தொகை மோசம் போகாது என்பதே பெரும்பாலானவர்கள் இதனை நோக்கி செல்வதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் வங்கிகள் சரியான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டவையாக இருப்பதால் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே மிக வலுவாக இருக்கிறது. ஆனால் இதில் சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நீங்கள் ஃபிக்ஸடு டெபாசிட் செய்திருக்கக்கூடிய வங்கி திடீரென திவால் நிலைக்கு சென்றால் உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை மட்டுமே திரும்ப கிடைக்கும். நீங்கள் அந்த வங்கிக் கணக்கில் 1 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தாலும் கூட உங்களுக்கு அதிகபட்ச உத்திரவாத தொகை 5 லட்சம் ரூபாய் தான் என்கிறது ரிசர்வ் வங்கி. அவ்வளவு எளிதாக ஒரு வங்கி திவால் நிலைக்கு சென்று விடாது இருந்தாலும் இதனை நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
மேலும் முதலீடு செய்பவர்கள் எந்த வங்கியில் முதலீடு செய்கிறோம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். இந்தியாவில் மிக வலுவாக செயல்படக்கூடிய பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாக இருக்கிறது.
இந்தியாவில் சில சிறு வங்கிகள் அதிக வட்டி வருமானம் தருவதாக அறிவிப்பு வெளியிடுகின்றன. ஆனால் 2020 ஆம் ஆண்டு எஸ் பேங்க்கில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பணத்தை எடுக்க முடியாமல் தவித்ததை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே ஃபிக்ஸடு டெபாசிட் என வரும் போது பெரிய வங்கியை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதேபோல வங்கிகள் அல்லாத சில நிறுவனங்களும் கூட இது போன்ற டெபாசிட் வாய்ப்புகளை வழங்குகின்றன. அவ்வாறு முதலீடு செய்யும்போது AAA அல்லது AA+ ரேட்டிங் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது.
இந்தியாவில் பஜாஜ் பைனான்ஸ், மகேந்திரா மகேந்திரா பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் AAA ரேட்டிங் பெற்றுள்ளன. ஸ்ரீராம் பைனான்ஸ், சோழமண்டலம் பைனான்ஸ் AA+ ரேட்டிங் பெற்றுள்ளன.
எனவே நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு CRISIL ரேட்டிங் பரிசோதனை செய்வது நல்லது. அதேபோல ஃபிக்ஸடு டெபாசிட்டுகளில் கிடைக்கும் வட்டியானது வருமானமாக கருதப்படுவதால் ஒட்டுமொத்தமாக நம்முடைய வருமான வரி விகிதங்களையும் இதில் கணக்கில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்தக்கூடிய பிரிவில் வரக்கூடிய நபர் 8 சதவீத வட்டி தரக்கூடிய ஃபிக்ஸடு டெபாசிட்டில் முதலீடு செய்கிறார் எனும் போது வருமான வரி பிடித்த பிறகு அவருக்கு கிடைக்க கூடிய வட்டி வருமானம் 6.34 சதவீதம், இதில் பணம் வீக்க விகிதமான 6 சதவீதத்தை கழித்தால் அவருக்கு கிடைக்கும் லாபம் 0.34 சதவீதம் மட்டுமே. எனவே இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications